இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி, இலங்கை அணியை 109 ரன்களுக்கு சுருட்டி அசத்தியது. அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் 8வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பும்ரா, இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுப்பது இதுவே முதன்முறையாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL2022: ஐபிஎல் அணிக்காக தலைமுடி நிறத்தை மாற்றிய கிரிக்கெட் வீரர்


அஸ்வின் மற்றும் முகமது சமி தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடியது. அதேநேரத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்டையும் பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 22 ரன்களிலும், ரோகித் சர்மா 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹனுமா விஹாரி 35 ரன்களும், கோலி 13 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.



மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரிஷப் பன்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 28 பந்தில் அரைசதம் அடித்து வரலாறு படைத்தார். இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், 1982 ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 30 பந்துகளில் அரைசதம் அடித்ததே இந்திய அணி வீரர் ஒருவர் குறைந்த பந்தில் அடித்த அரைசதமாக இருந்தது. ஏறத்தாழ 40 வருடமாக இருந்த அந்த சாதனையை இன்று முறியடித்தார் ரிஷப் பன்ட். 2005 ஆம் ஆண்டு 26 பந்துகளில் அப்ஃரிடி அரைசதம் அடித்ததே இந்தியாவில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அரைசதமாக உள்ளது. இந்த சாதனையை வெறும் 2 பந்தில் ரிஷப் பன்ட் மிஸ் செய்தார். 


இந்திய அணிக்கு எதிராக செய்ய முடியுமா? இங்கிலாந்தை விளாசிய பிராத்வெயிட் - ஏன்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR