ரிஷப் பந்த் சதம் அடிக்கவில்லை, அது பந்துவீச்சாளர்களின் தவறு - முகமது ஆசிப்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் பந்த் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 146 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் முதல் நாளில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சதத்திற்கு போதுமான அளவு அவர் சோதிக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் முகமது ஆசிப் கூறியுள்ளார். பந்த் 111 பந்துகளில் 146 ரன்கள் குவித்து, 98/5 என்ற பரிதாப நிலையில் இருந்து இந்தியாவை மீட்டார். ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்து போட்டியை தன் பக்கம் மாற்றினார்.
மேலும் படிக்க | மைதானத்தில் சண்டையிட்டு கொண்ட விராட் கோலி - ஜானி பேர்ஸ்டோவ்!
"இது முற்றிலும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் தவறு, ஏனெனில் பந்த் எந்த அதிசயமும் செய்யவில்லை. அவரின் பேட்டிங்கில் நிறைய கோளாறுகள் உள்ளன. அவரது இடது கை வேலை செய்யவில்லை, ஆனால் அவர் சதம் அடிக்க முடிந்தது, ஏனெனில் அவரது பலவீனமான பகுதிகளில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அவருக்கு பந்து வீசவில்லை. நான் தனிநபர்களை பெயரிட மாட்டேன், ஆனால் இங்கிலாந்து நிறைய தவறுகளை செய்துள்ளது. ஜடேஜா மற்றும் பந்த் பேட்டிங் செய்யும் போது, அவர்கள் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளரைக் கொண்டு வந்தனர், அவர் அந்த நேரத்தில் பந்து வீச சிறந்த வாய்ப்பாக இல்லை, ”என்று ஆசிஃப் ஒரு ட்விட்டர் வீடியோவில் கூறினார்.
"பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி, பந்த் பேட்டிங் செய்த போது அவரை அவுட் செய்ய சரியான திட்டம் இல்லை மற்றும் தவறான முடிவுகளை எடுத்தார். நான் பந்திற்கு எதிரானவன் அல்ல, கோஹ்லியின் பேட்டிங் பிரச்சனை குறித்து முன்பே நான் கூறினேன். இன்று பாருங்கள், அவர் நீண்ட காலமாக சதம் அடிக்கவில்லை. நான் கோஹ்லியை பார்க்க விரும்புகிறேன், அவர் என்னை விட பெரிய வீரர். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக, அவர் கடினமாக உழைக்க வேண்டும்” என்று ஆசிப் மேலும் கூறினார்.
மேலும் படிக்க | 3 பந்தில் 24 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த பும்ரா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR