இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் ரிஷ்ப் பன்ட் மற்றும் ஊர்வசி ரவுடேலாவுக்கு இடையேயான புகைச்சல் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இருவரும் மாறிமாறி சமூகவலைதளங்களில் அடுத்தடுத்து போஸ்ட் போட்டுக் கொண்டே இருக்கின்றனர். இதனை தொடங்கி வைத்தவர் ஊர்வசி ரவுடேலா என்பதால், ரிஷப் பன்ட் என்டுகார்டு போட விரும்பவில்லை. தக்க பதிலடி கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரச்சனை தொடங்கியது ஒரு நேர்காணலில் தான். அண்மையில் நேர்க்காணல் ஒன்றில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, ரிஷப் பன்டின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ஆர்பி என சுருக்கமாக குறிப்பிட்டு பேசினார். அதில், ஆர்பி என்ற பிரபலமான நபர் என்னை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால், நான் சந்திக்கவில்லை. தொடர்ச்சியாக கால் செய்து கொண்டே இருந்திருக்கிறார். நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்த வெகுநேரம் காத்திருந்துவிட்டுச் சென்றார். அப்போது நான் அசந்து தூங்கியதால், அவரை பார்க்கவில்லை. பின்னர் இதனையறிந்து மும்பையில் சந்திக்கலாம் என கூறி அனுப்பிவிட்டேன் எனக் கூறினார்.


மேலும் படிக்க | ஷாக் கொடுத்த பாலிவுட் நடிகை! கடும் கோபத்தில் ரிஷப் பன்ட்



அவரின் இந்த வீடியோ வைரலானதையடுத்து, இன்ஸ்டாகிராமில் ரிப்ளை கொடுத்த ரிஷப் பன்ட், சிலர் வேடிக்கைக்காகவும், விளம்பரத்துக்காகவும் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுக்கின்றனர். அதில் குறைந்தபட்ச உண்மை இருந்தால்கூட பரவாயில்லை. பொய் பேசி புகழ்தேடுவதை சிலர் விளம்பரமாக வைத்திருக்கின்றனர் என கடுமையாக சாடி பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு அடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட ஊர்வசி ரவுடேலா, சின்ன பையனே கிரிக்கெட்டில் கவனம் செலுத்துங்கள். எது விளம்பரம்? உண்மை என்பது மக்களுக்கு தெரியும். விளம்பரத்துக்காக யாரும் பேசவில்லை என கூறியிருந்தார். இந்த பதிவுக்கு மீண்டும் ஒரு பதிவை போட்டிருக்கிறார் ரிஷப் பன்ட். அதில், உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. 


ரிஷப் பன்ட் மற்றும் ஊர்வசி ரவுடேலா சில ஆண்டுகளுக்கு முன்பு டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்துவிட்டனர். இப்போது இஷா நேகி என்பவரை ரிஷப் பன்ட் காதலித்து வருகிறார்.


மேலும் படிக்க | ரிஷப் பன்டை மீண்டும் சீண்டிய பாலிவுட் இளம் நடிகை; தொடரும் வார்த்தை போர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ