இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா 2000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மூன்று மாதங்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டியில் விளையாடியது. இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.


அயர்லாந்து தொடருக்கு முன் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா டி20 போட்டியில் 1949 ரன்கள் எடுத்திருந்தார். முதல் போட்டியில் 32 ரன்னும், இரண்டாவது போட்டியில் 5 ரன்னுடனும் ரோகித் சர்மா அவுட்டானார். இதனால் 2000 ஆயிரம் ரன்களை எட்ட முடியவில்லை.


இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 14 ரன்களை எடுத்து 2000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். டி-20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த 5வது வீரர் ரோகித் சர்மா. மேலும், டி 20 போட்டிகளில் மூன்றாவது சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.


ஏற்கனவே விராட் கோலி, மெக்கல்லம், கப்தில், சோயப் மாலிக் 2000 ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.