’என்னென்ன கார் வைத்திருக்கிறீர்கள்’ ரோகித் சர்மா கேட்ட கேள்வி; பாபர் அசாம் ரியாக்ஷன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களுடன் உரையாடிய சுவாரஸ்ய தகவல்களை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி பிரிஸ்பேன் நகர் சென்றடைந்தது. அங்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாக தயாராகும் வகையில் இரு பயிற்சி ஆட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | ஜார்க்கண்ட் அணியுடன் தோனி: கிரிக்கெட் களத்தில் பார்க்க ரசிகர்கள் உற்சாகம்
"இந்தியா - பாகிஸ்தான் போட்டி எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்கு தெரியும். அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் நன்கு உணர்ந்துள்ளோம். அதேநேரத்தில் அதனை பற்றி எப்போதும் பேசிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அலசி ஆராய்வதற்கும் ஒன்றும் இல்லை. நாங்கள் கடந்த முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி முடித்த பிறகு ஜாலியாக பேசிக் கொண்டோம். குடும்பத்தினர் பற்றியும், பாபர் அசாம் வீட்டில் என்ன கார்களை எல்லாம் வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டோம்" என கேப்டன் ரோகித் சர்மா ஜாலியாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், " கடைசி நேரத்தில் முடிவெடுப்பது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் பிளேயிங் லெவன் தயாராக இருக்கிறது. அந்தந்த வீரர்களிடமும் தெரிவித்துவிட்டோம். அவரவர்கள் களத்தில் தங்களின் பொறுப்புகளை சரியாக செய்தால் போதும். இந்திய அணியின் துருப்பு சீட்டு சூர்யகுமார் யாதவ். அவர் இதே ஃபார்மில் தொடர்ந்து விளையாடுவார் என நம்புகிறேன்" என்றும் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ