எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்.16ஆம் தேதி தொடங்குகிறது. தொடர் முழுவதும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில், முதல் சுற்று வரும் அக். 16ஆம் தேதியில் இருந்து அக். 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, சூப்பர் 12 சுற்று அக்.22ஆம் தேதி தொடங்குகிறது. நவ. 9, 10 தேதிகளில் அரையிறுதிப்போட்டிகள், நவ. 13ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
சூப்பர்-12 சுற்றுக்கு போட்டிக்கு முன்பாக, பல்வேறு அணிகள் பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்கின்றன. மேலும், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடியதில்லை. எனவே, பயிற்சியை விரைவாகவே தொடங்க ரோஹித் சர்மா தலைமையிலான 14 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அக். 6ஆம் தேதியே ஆஸ்திரேலியா புறப்பட்டது.
அதாவது, பயிற்சி ஆட்டங்களில் இரண்டு போட்டிகள் முன்னரே திட்டமிடப்பட்ட நிலையில், இந்திய அணி கூடுதல் பயிற்சிக்காக கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேற்கு ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்கள் திடீரென திட்டமிடப்பட்டது. அக். 10, 13ஆம் தேதிகளில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகளையும் இந்தியா வென்றது.
மேலும் படிக்க | ஷமி மட்டுமல்ல... ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் 2 பவுலர்கள் - பலமாகுமா இந்தியா?
தற்போது, பும்ராவின் விலகலை தொடர்ந்து, உலகக்கோப்பைக்கான இந்திய அணியை மாற்றி பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில், முன்னாள் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் விமர்சனக் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில்,"உம்ரா மாலிக் நல்ல வேகத்தை வைத்துள்ளார். ஐபிஎல் தொடரிலும் நல்ல பீல்ட் செட்டப் உடன் நன்றாக பந்துவீசினார். இந்தியாவை விட ஆஸ்திரேலியாவில் மைதானங்கள் பெரியது என்பதால் எனும்போது உம்ரான் மாலிக்கை எடுத்திருக்கலாம். மேலும், ஆடுகளங்களை பொறுத்தவரை, இந்தியாவிற்கு மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் என்பது அதிகமானது என்றே கூறுவேன். உம்ரான் மாலிக்கை சேர்த்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.
பவுன்ஸ் இருக்கும் என்பது ஒத்துக்கொள்கிறேன். பெரிய சுழற்பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடலாம், ஆனால் மூன்று என்பது மிக அதிகம். எப்படியிருந்தாலும், ஒருவர் தான் பிளேயிங் லெவனில் இருக்கப்போகிறார். மாற்றத்திற்காக மற்றொருவர் என்றாலும், மூன்று பேர் அதிகம்தானே. அதனால்தான், அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக்கை எடுத்திருக்கலாம் என்றேன். அது சிறப்பான முடிவாகவும் இருந்திருக்கும்".
மேலும், அவர் இந்த கருத்தை கூறுவதற்கான முக்கிய காரணம் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளதால் பந்துவீச்சு தரப்பு சற்று வலுவிழந்து காணப்படுகிறது. முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல், அர்ஷ்தீப் என இருந்தாலும் அனைவரும் வேகம் என்று வரும்போது பும்ரா, உம்ரான் ஆகியோர் ஒப்பிடவே இயலாது. ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகத்திற்கு அதிக ஒத்துழைப்பு தரும் என்பதால், இந்தியாவின் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் திட்டம் சற்று யோசிக்க வேண்டியதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | T20 world Cup: சூர்யகுமார் யாதவ் நம்பர் 2: கோலி - ரோகித் எல்லாம் பின்னாடி தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ