பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து சொதப்பும் ரோஹித் சர்மா!
இன்று நடைபெற்று வரும் இந்திய பாகிஸ்தான் போட்டியில் ரோஹித் சர்மா ரன் ஏதும் இன்றி வெளியேறினார்
இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணியுடன் மீண்டும் மோதுகிறது இந்திய அணி. டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. பெரிதும் எதிர்பார்க்கபட்ட ரோஹித் சர்மா முதல் பந்திலேயே ரன் ஏதும் இன்றி வெளியேறினார்.
ALSO READ புலிகளை ஓடவட்ட சிங்கங்கள்! 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்ரீலங்கா வெற்றி!
இந்த போட்டி மட்டும் இன்றி இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய அனைத்து டி20 போட்டிகளிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார் ரோஹித். இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக 7 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த 7 போட்டிகளில் மொத்தமாக வெறும் 70 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் ரோஹித். சராசரி 17.50, ஸ்ட்ரைக் ரெட் 129.63 உடன் ஒரு 50 கூட அடிக்கவில்லை.
ஒருநாள் போட்டிகளில் 16 மேட்சில் 720 ரன்கள் அடித்துள்ளார். ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் பேட்டிங் இறங்காத ரோஹித், இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் 41 பந்தில் 60 ரன்கள் அடித்தார். முக்கியமான இன்றைய ஆட்டத்தில் ரன் ஏதும் இன்றி அவுட் ஆகியுள்ளார். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலும் பெரிதாக சோபிக்காத ரோஹித் 13 போட்டிகளில் 381 ரன்கள் அடித்துள்ளார். இந்த வருடம் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு விராட் கோலி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவாத அறிவித்துள்ளார். அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ தோனியை ஆலோசகராக நியமிக்கபட்டதற்கான பின்னணி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR