டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.  இதுவரை கேப்டனாக 17 போட்டிகளில் 16-ல் வெற்றி பெற்றுள்ளார்.  இதன் மூலம் இங்கிலாந்தின் இயான் மோர்கன் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா.  நேற்று தர்மஷாலாவில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இலங்கையை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, இந்த சாதனையை படைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளை மாற்றி அமைத்த பிசிசிஐ!


இரண்டாவது இன்னிங்சில் 184 ரன்களை துரத்திய இந்திய அணி, ஸ்ரேயாஸ் ஐயர் (44 ரன்களில் 74 ரன்), ரவீந்திர ஜடேஜா (18 ரன்களில் 45), சஞ்சு சாம்சன் (25 ரன்) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 2.5 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம், இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது மட்டுமல்லாமல், T20I கிரிக்கெட்டில் தொடர்ந்து 11 போட்டிகளாக தோல்வியை சந்திக்காமல் இருந்து வருகிறது.   


இந்தியாவின் தொடர் 11 T20I வெற்றிகள்:


ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
ஸ்காட்லாந்துக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
நமீபியாவுக்கு எதிராக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
நியூசிலாந்துக்கு எதிராக 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
இலங்கைக்கு எதிராக 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
இலங்கைக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.



இதற்கிடையில், இந்த வெற்றியின் மூலம் ரோஹித் உலக சாதனையை படைத்துள்ளார். இந்தியாவை 17 T20I போட்டிகளில் சொந்த மண்ணில் 16 வெற்றிகளுக்கு வழிநடத்தியுள்ளார், இதனால் குறுகிய வடிவத்தில் சொந்த மைதானங்களில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.   இந்திய கேப்டன்களில் ரோஹித் சர்மா,  விராட் கோலியை விட மூன்று T20I வெற்றிகளையும், உள்நாட்டில் தோனியை விட ஐந்து வெற்றிகளையும் பதிவு செய்துள்ளார்.


மேலும் படிக்க | IPL2022: சிஎஸ்கே-வில் இருந்து வெளியேறப்போகும் மற்றொரு வீரர்


மேலும், 2021 நவம்பரில் டி20 வடிவத்தின் முழுநேர கேப்டனாக ஆனதிலிருந்து ரோஹித்துக்கு இது தொடர்ச்சியாக மூன்றாவது தொடர் வெற்றியாகும். நியூசிலாந்திற்கு எதிராக 3-0, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3-0 மற்றும் தற்போது ஸ்ரீலங்காக்கு எதிராக 2-0 என்று முன்னிலையில் உள்ளார்.  ஒட்டுமொத்தமாக, ரோஹித் T20I கேப்டனாக 25 போட்டிகளில் 23 வெற்றிகளைப் பெற்றுள்ளார், மேலும் அவரது தலைமையின் கீழ், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை 3-0 என கைப்பற்றிய பிறகு, T20I தரவரிசையில் டீம் இந்தியாவும் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.



இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து பேட்டர் மார்ட்டின் கப்டில் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி ஆகியோரை முந்தி ரோஹித் சர்வதேசப் டி20 போட்டிகளில்  அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.  இதற்கிடையில், டி20 தொடரில் இலங்கையை 3-0 என இந்தியா க்ளீன் ஸ்வீப் செய்தால், தொடர்ந்து அதிக டி20 வெற்றிகள் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் அணியுடன் பகிர்ந்து கொள்ளும். ஆப்கானிஸ்தான் தற்போது 12 வெற்றிகளுடன் தொடர்ந்து சாதனை படைத்துள்ளது.


மேலும் படிக்க | IND vs SL: கோலியை முறியடித்து ரோகித் சர்மா உலக சாதனை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR