Chase Master of Cricket : தீபாவளி பரிசு கொடுத்த `கிங்` கோலி - தோளில் தூக்கி கொண்டாடிய ரோஹித்!
டி20 உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணியை இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பெரிய வெற்றியை அடைந்துள்ளது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால், அதலபாதளத்தில் இருந்த இந்திய அணி, அசத்தலாக வெற்றி பெற உதவியது.
குறிப்பாக, 2ஆவது ஓவரில் கேஎல் ராகுல் அவுட்டாகியபோது, களமிறங்கிய கோலி கடைசி வரை நின்று இந்திய அணியின் வெற்றியில் பெரும்பங்கித்துள்ளார்.
அதிலும், 19ஆவது ஓவரின் கடைசி 2 பந்துகளில் அவர் அடித்த இரண்டு சிக்சர்கள் மிக முக்கியமானதாக அமைந்தது. அந்த வகையில், ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வான பின் அவர் அளித்த பேட்டியில், வாழ்நாள் முழுக்க இந்த இன்னிங்ஸை மறக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | IND vs PAK : பரபரப்பான போட்டியில் வென்றது இந்தியா - பட்டையை கிளப்பிய கோலி
அதில் அவர் பேசியதாவது,"இது எதோ மாயாஜாலம் போன்று உள்ளது. வார்த்தையே இல்லை, இங்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. கடைசி வரை நின்று ஆடினால், நாம் நிச்சயம் வெற்றி பெற முடியும் என ஹர்திக் பாண்டியா நம்பினார். பெவிலியின் என்டில் இருந்து அஃப்ரிடி பந்துவீச வந்தபோதே நாங்கள் முடிவெடுத்துவிட்டோம், அப்போதிருந்து அடிக்கத் தொடங்கலாம் என்று. ஹாரிஸ் ரௌஃப் தான் அவர்களின் பிரதான பந்துவீச்சாளர். அவரின் ஓவரில் நான் இரண்டு சிக்ஸர்கள் அடித்தேன். சாதரண கணக்கு கணக்குதான், நவாஸிற்கு ஒரே ஓவர்தான் இருந்தது, அதனால், நான் ரௌஃப்பை அடித்துவிட்டால் அவர்களுக்கு பதற்றம் ஏற்படும் என நினைத்தேன்.
அந்த சமயத்தில் 8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது, அடுத்து 6 பந்துகளில் 16 ரன்கள் என வந்துவிட்டது. மனது சொல்வதை பின்பற்றினேன். முதல் சிக்ஸர் அடித்த பந்து, மிகவும் குறைந்த வேகத்தில் வந்த பந்து, அதை அடிக்க வேண்டும் என நினைத்தேன் அடித்துவிட்டேன்.
இதுநாள் வரை மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய போட்டிதான் எனது சிறந்த ஆட்டம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், இன்றைய போட்டி அதையெல்லாம் தாண்டிவிட்டது. ஹர்திக் பாண்டியா என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார். ரசிகர்களும் அப்படிதான். ரசிகர்கள் எப்போதும் எனக்கு துணை நின்றார்கள். அவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன்" என்றார்.
விராட் கோலியை பொறுத்தவரை சேஸிங்கில் அவர் கில்லி என்பதை மீண்டும் ஒருமுறை நீருபித்து காட்டியுள்ளார். 3ஆவது இடத்தில் இறங்கும் அவர், அணிக்கான அவரது பணியை நன்கு உணர்ந்து, முதலில் பொறுமை, அடுத்து சற்று வேகம், வாய்ப்பு கிடைக்கும் போது அதிரடி என பக்காவாக பிளான் போட்டு, விராட் கோலி விளையாடியுள்ளார் என ரசிகர்களும், மூத்த வீரர்கள் அவரை பாராட்டு மழையில் நனையவைத்துள்ளனர்.
இந்தியா வெற்றி பெற்ற உடனே, இந்திய வீரர்கள் கோலியையும், அஸ்வினையும் நோக்கி ஓடி வந்தனர். அப்போது, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலியை தனது தோளில் ஏற்றிவைத்து கொண்டாடினார். வீரர்கள் பலரும் விராட் கோலியை ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரோஹித் விராட்டை தூக்கி கொண்டாடிய வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இந்திய அணி முதல் போட்டியை வென்றுள்ள நிலையில், அடுத்த போட்டியில் வரும் 27ஆம் தேதி, நெதர்லாந்து அணியை சந்திக்கிறது.
மேலும் படிக்க | IND vs PAK: கடுப்பில் திட்டிய பாண்டியா... அப்செட் ஆன ரோகித் - என்ன நடந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ