ICC World Cup 2023, IND vs BAN: நடப்பு ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 16 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. குறைந்தபட்சம் அனைத்து அணிகளும் தற்போது தலா 3 போட்டிகளை விளையாடிவிட்டன. ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மட்டுமே 4 போட்டிகளை நிறைவு செய்துள்ளது. இந்த 16 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி போட்டியிட்ட நான்கிலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாயுமா வங்கதேசம்?


இந்திய அணியும் இதுவரை தோல்வியே சந்தித்திராத நிலையில், 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. அந்த வகையில், இந்திய அணிக்கு இன்றைய வங்கதேச அணிக்கு எதிரான போட்டி முக்கியத்துவம் வாயந்ததாக இருக்கும். இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தையும், நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.


இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியுடனான நேற்றைய போட்டியில் 149 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் தனது வெற்றி பயணத்தை தொடர முடியவில்லை. அந்த வகையில், வங்கதேசமும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க கூடிய அணிதான் என்பதால் இந்திய அணி மிக மிக கவனமாக விளையாடும் என்று கூறலாம்.


மேலும் படிக்க | 'இவர் தான் ரொம்ப டேஞ்சர்...' விராட் கோலியே பயப்படும் அந்த பங்களாதேஷ் வீரர் யாருப்பா?


MCA ஆடுகளம் எப்படி?


அந்த வகையில் இன்று இந்தியா - வங்கதேசம் (IND vs BAN) மோதும் போட்டி புனே நகரில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க (MCA) மைதானத்தில் விளையாடுகிறது. இந்நிலையில், அந்த மைதானத்தின் ஆடுகளம் குறித்து இங்கு காணலாம். இந்த மைதானத்தில் உள்ள ஆடுகளம் பொதுவாக பேட்டிங் செய்ய நன்றாக இருக்கும். 


ஏனென்றால், கடந்த காலங்களில் இங்கு ஏழு ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அந்த போட்டிகளை பார்க்கும்போது, பேட்டிங்கிற்கு சாதகமாகவே புள்ளிவிவரங்கள் உள்ளன. இந்த 7 போட்டிகளில் ஐந்தில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 300-க்கும் அதிகமாக இருந்துள்ளது, அதிலும் இரண்டு முறை மட்டுமே அவை வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டது. 


டாஸ் வென்றால் என்ன செய்யலாம்?


மைதானம் திறந்த நிலையில் இருப்பதால், பந்து காற்றால் நல்ல அசைவை கொண்டிருக்கும். இது தொடக்க கட்ட ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக மாலை பொழுதில். எனவே, புனேவில் முதலில் பேட்டிங் செய்வதே சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றுவிட்டால் பேட்டர்கள் மிகவும் பெரிய ஸ்கோரை அடிக்க முடியும்ய செல்ல முடியும். மேலும், இந்த ஆடுகளத்தில் சேஸிங் சரியாக வராது.


பிளேயிங் லெவன்?


அணியின் பிளேயிங் லெவனை பார்க்கும்போது, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் என்பது நல்ல பார்முலாதான். இருப்பினும், வங்கதேச பேட்டிங் ஆர்டரில் மூன்று இடது கை வீரர்கள் இருப்பதால், இந்திய அணி கூடுதல் சுழல் ஆப்ஷனாக அஷ்வினை அணியில் சேர்க்கலாம் என கூறப்படுகிறது. அவர்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் (ஹர்திக் பாண்டியா உட்பட) இணைந்து இருக்க விரும்பினால், ஷர்துல் தாக்குருக்குப் பதிலாக முகமது ஷமியை சேர்க்கலாம் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.


மேலும் படிக்க | IND vs BAN: முகமது ஷமி வங்கதேச போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ