மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) இந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை (T20 World Cup) மற்றும் ஐபிஎல் (IPL 2020) இரண்டிலும் விளையாட விரும்புகிறார், ஆனால் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் காரணமாக இரண்டு தொடர்களில் ஒன்றை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையும் படிக்கவும் | கொரோனா பீதிக்கு மத்தியில் போட்டியில் பங்கேற்கும் WI அணி


ஆஸ்திரேலியாவில் (2020 T20 World Cup in Australia) அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பையின் தலைவிதி குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை, அதே நேரத்தில் பிரபலமான மற்றும் இலாபகரமான இந்தியன் பிரீமியர் லீக்கை (ஐ.பி.எல்) காலவரையின்றி பி.சி.சி.ஐ (BCCI) ஒத்தி வைத்துள்ளது.


டி 20 உலகக் கோப்பை (ICC Men's T20 World Cup) ஒத்தி வைக்கப்பட்டால், அந்த சாளரத்தில் ஐபிஎல் நடத்தப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது.


ரோஹித் சர்மா (Rohit Sharma) தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்விகளுக்கு பதில் அளித்த போது, அப்பொழுது ஒரு ரசிகர், இந்த ஆண்டு எந்த கிரிக்கெட் தொடரை விரும்புவீர் என்று கேட்டபோது "இரண்டையும் விளையாடுவேன்" என்றார்.


ஐபிஎல் (2020 Indian Premier League) தொடரில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸை அணியை ரோஹித் வழிநடத்துகிறார்.


இதையும் படிக்கவும் | தங்கள் நாட்டில் IPL போட்டிகளை நடத்தி கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் நாடு


இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்லும் போது பிங்க் பந்து டெஸ்டில் விளையாடுவது சவாலாக இருக்கும் என்றும் நட்சத்திர தொடக்க வீரர் கூறினார்.


ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி (India tour of Australia, 2020-21) நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 3 பிரிஸ்பேனில் உள்ள கபாவில் நடைபெறும்.


இரண்டாவது டெஸ்ட் அடிலெய்ட் ஓவலில் பகல்/ இரவு போட்டியாக நடைபெற உள்ளது. 


மகேந்திர சிங் தோனியை (MS Dhoni) குறித்து ஒரே வார்த்தையில் கூறவேண்டும் எனக் கேட்டபோது, "அவர் லேஜெண்ட்" என்றார்.


பல கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், ஆஸ்திரேலிய துணை கேப்டன் ஆஸ்திரேலிய ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்தின் ஜேசன் ராய் ஆகியோரின் பேட்டிங்கைப் பார்த்து ரசிக்கிறேன் என்றும் கூறினார்.


இதையும் படிக்கவும் | ஆபாச நட்சத்திரமாக மாற காரணம் என்ன? விளையாட்டு வீராங்கனை ரெனீ கிரேசி விளக்கம்