அஸ்வின் - ஜடேஜாவை எப்படி சமாளிக்கிறதுனே தெரியல: ரோகித் புலம்பல்
அஸ்வின் மற்றும் ஜடேஜாவை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய புலம்பலை கலகலப்பாக கொட்டி தீர்த்துள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மாவின் சதம், ரவீந்திர ஜடேஜாவின் அரைசதம் மற்றும் சிறப்பான பந்துவீச்சு, ரவி அஸ்வினின் மாயாஜால சுழல் ஆகியவை எல்லாம் இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு வித்திட்டன. போட்டிக்குப் பிறகு பேசிய ரோகித் சர்மா, இந்திய அணி வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், ஜடேஜா மற்றும் அஸ்வினை எப்படி சமாளிப்பது என்பதே தெரியவில்லை என்றும் கலகலப்பாக கூறினார்.
ரோகித் புலம்பல்
போட்டி முடிந்தபிறகு மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், சஞ்சய் மஞ்ரேக்கர் ஆகியோருடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இந்திய அணியின் வியூகங்கள், வெற்றிக்கு பின்னால் இருந்த காரணிகள் குறித்தெல்லாம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது, ஜடேஜா மற்றும் அஸ்வின் குறித்த ஒரு உண்மையை வெளிப்படையாக கூறினார். அதாவது, ஜடேஜா - அஸ்வின் இருவரும் தங்களின் ரெக்கார்டுகள் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருப்பதாகவும், அதற்காக எனக்கு ஓவர் கொடுக்க வேண்டும் என தொந்தரவு செய்து கொண்டே இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | IND vs AUS: KL ராகுல் அணியில் எதற்கு? வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!
சிறப்பான பந்துவீச்சாளர்கள்
" என்னை பொறுத்தவரை அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் ஆகிய மூன்று பேரும் சிறப்பான பந்துவீச்சாளர்கள். ஆனால், அணியில் இருக்கும் மற்ற பிளேயர்களை எல்லாம் சமாளிப்பதை விட அஸ்வின் மற்றும் ஜடேஜாவை சமாளிப்பது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. ஒருபுறம் 249 விக்கெட் எடுத்திருக்கும் ஜடேஜா எனக்கு பந்துவீச கொடுங்கள், இன்னும் ஒரு விக்கெட் எடுத்துவிடுகிறேன் என கேட்கிறார்.
மறுபுறம் 4 விக்கெட் எடுத்திருக்கும் அஸ்வின் என்னிடம் பந்து கொடுங்கள் 5 விக்கெட் எடுத்து விடுகிறேன் என்கிறார். எனக்கு அவர்களின் ரெக்கார்டு குறித்தெல்லாம் தெரியாது. அவர்கள் இருவரும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். இதுதான் எனக்கு சவாலாக இருந்தது. சரியான திசையில் இருந்து இருவரையும் பந்துவீச வைக்க வேண்டும் என்பது மட்டும் என்னுடைய எண்ணமாக இருந்தது" என காமெடியாக கூறினார்.
மேலும் படிக்க | IPL 2023: ஓய்வை அறிவிக்கும் தோனி... சிஎஸ்கேவின் வருங்காலம் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ