Yuvraj Singh About Mumbai Indians Captaincy: ஐபிஎல் என பொதுவாக அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் மீதம் உள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும் என தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதற்கட்ட போட்டிகள் எவையும் தலைநகர் டெல்லியில் நடைபெறவில்லை. அதுமட்டுமின்றி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மூன்று போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் அங்கு போட்டிகள் நடைபெறாது என்றும் அதற்கு பதில் கொச்சி, விசாகப்பட்டினத்தில் போட்டிகள் மாற்றப்படலாம் எனவும் தகவல்கள் கூறப்படுகின்றன. தற்போது அனைத்து அணிகளும் தங்களின் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.


வலிமையான மும்பை இந்தியன்ஸ்


இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு (Rohit Sharma) பதில், குஜராத் அணியில் இருந்து வந்த ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) கேப்டன் பொறுப்பை பெற்றார். மேலும், பந்துவீச்சில் பும்ராவும் திரும்பியிருக்கிறார், கோட்ஸி உள்ளிட்ட சில முக்கிய வீரர்களும் வந்துள்ளதால் கடந்தாண்டை விட இந்த முறை மும்பை இந்தியன்ஸ் வலிமையான அணியாக தோற்றமளிக்கிறது. 


மேலும் படிக்க | IPL 2024: மும்பை அணிக்கு மேலும் பின்னடைவு! சூர்யகுமார் யாதவ் விளையாடுவது சந்தேகம்!


இது ஒருபுறம் இருக்க மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்ஸி மாற்றம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இப்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ரோஹித் சர்மா கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் வென்றுக்கொடுத்தவர். அவரை கேப்டன்ஸியில் இருந்து நீக்குவது மிகப்பெரிய முடிவு. . நானாக இருந்திருந்தால், கேப்டன்ஸியில் ரோஹித்துக்கு இன்னொரு சீசனைக் கொடுத்து ஹர்திக்கை துணைக் கேப்டனாக நியமித்திருப்பேன்.


ஹர்திக் பாண்டியா திறமைசாலிதான்


ஆனால் வெளிப்படையாக, அணி உரிமையாளரின் பார்வையில் இருந்து அவர்கள் எதிர்காலம் குறித்து யோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் மீண்டும், ரோஹித் இன்னும் இந்திய கேப்டனாக தொடர்கிறார், அவர் நன்றாக விளையாடுகிறார். எனவே, இது ஒரு பெரிய முடிவுதான்.


அனைவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். ஆனால், அணி உரிமையாளரின் எதிர்காலத்திற்கான சரியான முடிவை எடுக்க வேண்டும். அணி ஹர்திக்கை கேப்டனாக்குவதில் ஆர்வமாக இருப்பதாக நான் நினைக்கிறேன், மும்பை இந்தியன்ஸ் அணி நன்றாக விளையாடும் என்று நம்புகிறேன். திறமையைப் பொறுத்தவரை, ஹர்திக் சிறந்த திறமைசாலி என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.


குஜராத் அணியின் கேப்டனாக இருப்பது வேறு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது வேறு. எதிர்பார்ப்புகள் அதிகமிருக்கும் மற்றும் மும்பை அணி முன்னணி அணியாகும். அவர் அதிக அழுத்தத்தை சுமக்க வேண்டும். அவரைச் சுற்றி அவருக்கு நல்ல ஆதரவு இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | ஆர்சிபி மட்டும் இல்லை! 2008 முதல் இந்த 2 அணிகளும் கோப்பை வென்றது இல்லை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ