IPL 2022: ஐபிஎல் போட்டிகளில் MI கேப்டன் ரோஹித் சர்மா PBKSக்கு எதிரான தனது இன்னிங்ஸில் முக்கியமான சாதனை படைத்துள்ளார். ஐபிஎல்லில் 213 இன்னிங்ஸ்களில் 5719 ரன்கள் குவித்த ரோஹித், இருபது ஓவர் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பஞ்சாப் கிங்ஸ் அணி (PBKS)க்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்து விராட் கோலி, கீரன் பொல்லார்ட் வரிசையில் ரோஹித்தும் இணைந்தார்.


ஐபிஎல் 2022 இன் மும்பை இந்தியன்ஸின் 5 வது போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இந்த மைல்கல்லை சாதனையை 34 வயதான ஷர்மா படைத்தார்.


 விராட் கோலி (10,379) க்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ரோஹித்தின் கிரிக்கெட் மகுடத்தில் மற்றுமொரு மயிலிறகு இது.


இந்த எலைட் பட்டியலில், முதலிடத்தில் இருப்பவர் மும்பை அணி வீரர் கீரன் பொல்லார்ட் (11,474), அதே அணியின் ரோஹித் இந்த சாதனையில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பஞ்சாப்பை பதறவைத்த பீரிவிஸ்


புதன்கிழமையன்று நடைபெற்ற போட்டியில் தனது இன்னிங்ஸைத் தொடங்கிய ரோஹித், வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவின் பந்துவீச்சில் ஒரு பெரிய சிக்ஸருடன் 16 பந்துகளில் அந்த இலக்கை கடந்தார். இருப்பினும், ஸ்டைலான பேட்டர் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து தனது இன்னிங்ஸை 17 பந்தில் 28 ரன்களுடன் முடித்தார்.


இந்தியா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2021 ஐபிஎல் தொடரின் போது 10,000 டி20 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அவர் அந்த இலக்கை எட்டிய ஐந்தாவது கிரிக்கெட் வீரர் ஆவார்.


வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 463 ஆட்டங்களில் 14,562 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் ரன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் சோயப் மாலிக் (11,698), வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் (11,474), ஃபின்ச் (10,499), கோஹ்லி (10,379), டேவிட் வார்னர் (10,373) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.


ஐபிஎல்லில் 213 இன்னிங்ஸ்களில் 5719 ரன்கள் குவித்த ரோஹித், அதிக ரன் குவித்த மூன்றாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமையன்று நடைபெற்ற போட்டியில் 70 ரன்கள் எடுத்த ஷிகர் தவான், 196 இன்னிங்ஸ்களில் 5891 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் 204 போட்டிகளில் 6390 ரன்களை குவித்த கோஹ்லி ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.


மேலும் படிக்க | கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 6 விக்கெட் இழந்த அணி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR