ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது. இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்களுக்கு அறிவுரை போன்று ஒரு எச்சரிக்கை செய்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. வீரர்கள் விளையாடுவதற்கு மந்திரம் எல்லாம் சொல்ல மாட்டேன், அவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என சுருக்கென்ற அறிவுரையை கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி 


ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியான 'ஃபாலோ தி ப்ளூஸ்' நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா பங்கேற்றார். அதில், இந்திய அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேசினார். "அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்களுடன் நெருக்கமாக பழக வேண்டியது அவசியம். அப்போது தான் அவர்களின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும், அவர்கள் என்ன செய்ய வேண்டும்? அணி என்ன எதிர்பார்க்கிறது? என்பதை எளிதாக கூறிவிடமுடியும். அணி எதிர்பார்ப்பதை அவர்கள் தெரிந்து கொண்டாலே, அவர்கள் தங்கள் விளையாட்டை விளையாட உதவியாக இருக்கும். இதன் மூலம் வீரர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு, எந்த திசையில் செயல்பட வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.


மேலும் படிக்க | ஆசியக்கோப்பை 2022; இந்தியா - பாகிஸ்தான் இதுவரை சந்திக்காத ஒரு மேட்ச்


மந்திரம் எல்லாம் இல்லை


வீரர்கள் விளையாடுவதற்கு மந்திரம் எல்லாம் இல்லை. அப்படி எதுவும் நான் சொல்ல மாட்டேன். அவர்களின் பொறுப்பை அணியிடம் இருந்து தெரிந்து கொண்டால், அதற்கேற்ப அவர்கள் விளையாட தயாராகிக் கொள்ள வேண்டும். ஒருவகையில் வீரர்களுக்கு இந்த அணுகுமுறை புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். அணியாக, என்ன வேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் வீரர்களிடத்தில் தெரிவித்துவிடுவோம். சில வீரர்களுக்கு கடினமான காலங்கள் இருக்கும். அவர்கள் அதில் இருந்து வெளியே வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து வகையான நம்பிக்கை உறுதுணையை கொடுக்க அணி தயாராக இருக்கிறது.  


சுமூகமான சூழல்


ஒரு கேப்டனாக அதிக அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும். அது கேப்டனின் முக்கிய பங்கு. வீரர்கள் கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும். இதனை செய்யவும், நடைமுறைப்படுத்தவும் நான் முயற்சிக்கிறேன். பந்துவீச்சாளரை எடுத்துக் கொண்டால், பந்து அவர்களின் கையில் சென்றவுடம் ஒருவகையான அழுத்தம் ஏற்படும். அதனைக் கடந்து அவர் சிறப்பாக பங்களிப்பு செய்ய அணி அவரை தொடர்ந்து ஊக்குவிக்கும்" எனத் தெரிவித்தார்.


மேலும் படிக்க | ஜிம்பாப்வே பவுலர் குடும்பத்துக்கு சர்பிரைஸ் கொடுத்த இந்திய பவுலர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ