இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஏனென்றால் மும்பை பிட்சில் இந்த உலக கோப்பை தொடரில் நடைபெற்றிருக்கும் நான்கு போட்டிகளில் ஒரே ஒரு போட்டி மட்டுமே சேஸிங்கில் வெற்றி வந்திருக்கிறது. எஞ்சிய 3 போட்டிகளும் முதலில் பேட்டிங் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. இதனை மனதில் வைத்தே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் எடுத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | LIVE World Cup Semi Final-1: இந்திய அணி டாஸ் வெற்றி - பேட்டிங் ஆடுவதாக ரோகித் அறிவிப்பு


பிளேயிங் லெவனைப் பொறுத்தவரை இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த போட்டிகளில் விளையாடிய அணியே நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் களமிறக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை ஒரே ஒரு மாற்றமாக டிம் சவுதி பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்.



2019 ஆம் ஆண்டைப் போலவே இரு அணிகளும் 2023 உலக கோப்பை தொடரிலும் மோதுவதால் ரசிகர்கள் வான்கடே மைதானத்தில் குவிந்துள்ளனர். குறிப்பாக திரை நட்சத்திரங்கள் முதல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை என பலரும் வான்கடேவில் முகாமிட்டுள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர், கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம், தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோர் வான்கடே மைதானத்தில் நேரில் போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.


அதற்கேற்ப இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். நியூசிலாந்து அணியின் ஸ்டார் பவுலர்களான டிரெண்ட் போல்ட் மற்றும் டிம் சவுதி ஆகியோரின் ஓவர்ளிலேயே சிக்சர் மழை பொழிந்து வருகிறார். வெறும் 25 பந்துகளில் 45 ரன்கள் குவித்திருப்பதுடன் உலக கோப்பையில் 50 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கிறிஸ் கெயில் இதற்கு முன்பு 49 சிக்சர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. 


மேலும் படிக்க |  உலகக் கோப்பை 2023: 2019 -ல் இருந்த அதே நடுவர்கள் - இந்திய அணிக்கு மோசமான செய்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ