World Cup 2023: நியூசிலாந்தை பழிதீர்த்தது இந்தியா... இறுதிப்போட்டிக்கு தகுதி!

LIVE World Cup Semi Final: இறுதிப்போட்டியில் இந்தியா... ஷமிக்கு 7 விக்கெட்!

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 15, 2023, 11:13 PM IST
    உலக கோப்பை அரையிறுதிப் போட்டி இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல் பிட்ச் திடீரென மாற்றப்பட்டதால் ஐசிசி அதிருப்தி
Live Blog

IND VS NZ 1st Semi final World Cup: உலக கோப்பை 2023 (ICC Cricket World Cup 2023) தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து (India vs New Zealand) அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் (Wankhede Stadium, Mumbai) நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக கால்பதிக்கும். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. ஆனால் நியூசிலாந்து அணி முதல் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீரா கனவுடன் இருக்கிறது. உலக கோப்பை 2023 முதல் அரையிறுதி போட்டியில் (ICC Cricket World Cup 2023, 1st Semi-Final) வெற்றி பெற்று எந்த அணி இறுதிபோட்டிக்கு செல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

15 November, 2023

  • 23:32 PM

    பைனலும் இந்தியாவும்

    உலகக் கோப்பை தொடரில் 1983, 2003, 2011 ஆகியவற்றுக்கு பின் தற்போது நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது. இதில் 2003இல் மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது.

  • 22:15 PM

    இறுதிப்போட்டியில் இந்தியா

    நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது இந்திய அணி.

  • 22:05 PM

    மிட்செல் அவுட்

    இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மிட்செல் 134 ரன்களில் அவுட்டானார். இன்னும் 4 ஓவர்களுக்கு 90 ரன்களை நியூசிலாந்து எடுக்க வேண்டும். இந்தியா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி பெறும். 

  • 22:00 PM

    வந்த உடன் சென்றார் சேப்மேன்!

    IND vs NZ: பிலிப்ஸ் அவுட்டான பின் சேப்மேன் 2 ரன்களில் ஆட்டமிழந்தா். தற்போது சான்ட்னர் களம் புகுந்தார். நியூசிலாந்து வெற்றிக்கு 6 ஓவர்களில் 99 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.

  • 21:49 PM

    பிலிப்ஸ் அவுட்!

    மிட்செல் - பிலிப்ஸ் ஜோடி 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பும்ரா பந்துவீச்சில் பிலிப்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 

  • 21:45 PM

    நெருங்கும் நியூசிலாந்து

    நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 9 ஓவர்களில் 112 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது. 

  • 20:54 PM

    வெளியேறினார் வில்லியம்சன்!

    IND vs NZ: உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 69 ரன்களில் ஷமி வெளியேறினார். மறுபக்கம் மிட்செல் சதம் அடித்தார். அடுத்து வந்த டாம் லாதமும் டக்அவுட்டாகினார்.

  • 20:11 PM

    அசுறுத்தும் பார்ட்னர்ஷிப்

    அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதியில் நியூசிலாந்து அணி பேட்டிங்கில் 3ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு கேன் வில்லியம்சன் - மிட்செல் ஜோடி 100+ ரன்களை அமைத்து தொடர்ந்து விளையாடி வருகிறது. 

  • 19:05 PM

    அரையிறுதியில் ரஜினிகாந்த்

    நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான அரையிறுதி போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் மும்பை வான்கடே மைதானத்திற்கு வருகை தந்தனர்.

  • 19:01 PM

    மீண்டும் விக்கெட் எடுத்த ஷமி

    IND vs NZ: கான்வேவை ஷமி ஆட்டமிழக்கச் செய்த நிலையில், ரச்சின் ரவீந்திராவையும் அவர் வெளியேற்றி அசத்தினார். 

  • 18:50 PM

    கிளம்பினார் கான்வே

    நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் தனது முதல் பந்திலேயே நியூசிலாந்து பேட்டர் கான்வேயை ஆட்டமிழக்கச்செய்தார், ஷமி. நியூசிலாந்து ்அணி தற்போது 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 34 ரன்களை எடுத்துள்ளது. 

  • 18:24 PM

    டேவிட் பெக்காம் மகிழ்ச்சி

    நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியை இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் காண வந்துள்ளார். முதல் பேட்டிங்கிற்கு பிறகு அவர் அளித்த பேட்டியில், "நான் சரியான நேரத்தில் இந்தியாவில் இருக்கிறேன். நான் தீபாவளி பண்டிகையை பார்த்தேன். இன்று விராட் கோலி பேட்டிங் செய்து 50வது சதத்தை எட்டியதை பார்த்தேன்" என்றார்.

  • 18:19 PM

    விராட் கோலி படைத்த சாதனை

    Virat Kohli Records: நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி படைத்த சாதனைகள் கீழ்வருமாறு:

    - ஒருநாள் அரங்கில் அதிகபட்ச சதத்தை (50) பதிவு செய்தார், விராட் கோலி.

    - ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை (711) குவித்த பட்டியலில் விராட் கோலி முதலிடம்.

    - ஒருநாள் அரங்கில் 3ஆவது அதிகபட்ச ரன்களை (14,734) குவித்தார், விராட் கோலி. 

  • 17:56 PM

    விராட் குறித்து சச்சின் டெண்டுல்கர்

    இந்திய டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, மற்ற வீரர்கள் என் கால்களைத் தொட்டு வணங்கும்படி உங்களை கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவிலேயே, உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

    ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட வேறு எதில் நாம் மகிழ்ச்சியடைய முடியும். உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், அதாவது மிகப் பெரிய அரங்கில் அதைச் செய்ய அதுவும் எனது சொந்த மண்ணில் செய்ததுதான் தனிச்சிறப்பு.

  • 17:50 PM

    இமாலய இலக்கு

    IND vs NZ Match Update: நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்தது. 

  • 17:40 PM

    அடுத்தடுத்து விக்கெட்டுகள்

    IND vs NZ: ஷ்ரேயாஸ் 105 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 1 ரன்னுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

  • 17:37 PM

    சொந்த மண்ணில் ஷ்ரேயாஸ் சதம்

    IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 66 பந்துகளில் சதம் அடித்து மிரட்டியுள்ளார்.

  • 17:20 PM

    கம்பீரமாக வெளியேறினார் விராட்

    IND vs NZ Score Updates: நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் விராட் கோலி 117 ரன்களை எடுத்தபோது, டிம் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 113 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை அடித்திருந்தார்.

    மைதானத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கர், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்பட அனைவரின் கரகோஷத்துடனும் அவர் பெவிலியன் திரும்பினார்.

  • 16:48 PM

    50ஆவது ஓடிஐ சதம்...  

    Virat Kohli Century: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் அரங்கில் தனது 50ஆவது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி

  • 16:45 PM

    ஷ்ரேயாஸ் அரைசதம்

    IND vs NZ:  நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் அரைசதம் அடித்த நிலையில், நடப்பு உலகக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்களை அடித்து மிரட்டியிருக்கிறார்.

  • 15:55 PM

    3வது இடத்தில் விராட் கோலி

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 13705 ரன்களுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் விராட் கோலி

  • 15:43 PM

    அவுட் ஆகாமல் வெளியேறிய கில்

    இந்திய அணி ஓப்பனர் சுப்மான் கில் விளையாடி வந்தபோது சிறிய அசௌகர்யம் ஏற்பட்டது காரணமாக அவர் ரிட்டையர்ட் ஹர்ட் (Retired Hurt) முறையில் களத்தில் இருந்து வெளியேறி உள்ளார். அவர் 65 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 79 ரன்களுடன் களத்தில் இருந்து வெளியேறி உள்ளார். அது சரியானதும் அவர் மீண்டும் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • 15:32 PM

    வலுவான நிலையில் இந்தியா!

    IND vs NZ Match Update: இந்திய அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 150 ரன்களை எடுத்துள்ளது. சுப்மன் கில் 74 ரன்களுடனும், விராட் கோலி 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

  • 15:05 PM

    விராட் கோலி சாதனை

    உலக கோப்பை 2023 -ல் 600 ரன்களை கடந்தார் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி

  • 15:04 PM

    சுப்மான் கில் அரைசதம்

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் அரைசதம் விளாசினார்

  • 14:40 PM

    ரோகித் சர்மா அவுட்

    அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களில் அவுட்டானார்.

  • 14:22 PM

    ரோகித் சர்மா சாதனை 

    உலக கோப்பையில் 50 சிக்சர்கள் அடித்த முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா

  • 14:21 PM

    போல்ட், சவுதி ஓவரில் சிக்சர் மழை

    நியூசிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட், டிம் சவுதி ஓவரில் சிக்சர்கள் அடித்து பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கிறார் ரோகித் சர்மா

  • 13:38 PM

    ரோகித் சர்மா அதிரடி பேட்டிங்

    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக பேட்டிங் விளையாடிக் கொண்டிருக்கிறார்

  • 13:36 PM

    இந்தியா - நியூசிலாந்து பிளேயிங் லெவன்

    மும்பை வான்கடேவில் நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகளின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை

  • 13:33 PM

    இந்திய அணி டாஸ் வெற்றி 

    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் ஆடுவதாக அறிவித்தார்.

  • 13:28 PM

    வான்கடே மைதானத்தில் சச்சின் - பெக்காம்

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறும் வான்கடேவில் சச்சின், டேவிட் பெக்காம் ஆகியோர் இந்திய அணியினரை சந்தித்து கலந்துரையாடினர்

  • 13:07 PM

    பிரபலங்கள் வான்கடேவுக்கு வருகை

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியை பார்க்க டேவிட் பெக்காம், சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ்,  ரன்பீர் கபூர் ஆகியோர் வான்கடே மைதானதுக்கு வருகை தந்துள்ளனர்.

  • 12:53 PM

    சச்சின் - ரிச்சர்ட்ஸ் சந்திப்பு

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோத இருக்கும் நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் - விவியன் ரிச்சர்ட்ஸ் சந்தித்துக் கொண்டனர்.

  • 12:49 PM

    வான்கடே மைதானத்தில் இந்திய அணி

    முதலாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வான்கடே மைதானத்துக்கு வந்தடைந்தது

  • 12:03 PM

    டாஸ் முக்கியமில்லை -  ரோகித் சர்மா

    நான் மும்பை வான்கடேவில் நிறைய போட்டிகள் விளையாடி இருக்கிறேன். இங்கிருக்கும் மைதானத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அதனால் டாஸ் குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்

  • 11:50 AM

    பாட் கம்மின்ஸ் கருத்து

    இதுவரை விளையாடிய உலக கோப்பை போட்டிகளில் பிட்ச் மீது ஆஸ்திரேலிய அணிக்கு எந்த அதிருப்தியும் இல்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்

  • 11:43 AM

    வான்கடே ஸ்டேடியம் ரெக்கார்ட்ஸ்

    மொத்த ஒருநாள் போட்டிகள்: 27

    முதலில் பேட்டிங் செய்யும் போது வென்ற போட்டிகள்: 14

    முதலில் பந்துவீசி வென்ற போட்டிகள்: 13

    முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர்: 261

    அதிகபட்ச மொத்தம்: 438/4 தென்னாப்பிரிக்கா vs இந்தியா

    சேஸிங்கின் போது அதிகபட்ச ஸ்கோர்: 293/7 ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா சேஸிங் செய்தது

    குறைந்த ஸ்கோர்: இலங்கை அணி 55 ரன்கள்

  • 11:41 AM

    பிட்ச் மாற்றம் - ஐசிசி அதிருப்தி

    நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் இந்திய அணி விளையாட திட்டமிடப்பட்டிருந்த பிட்சுக்கு பதிலாக இரவோடு இரவாக வேறு பிட்சில் போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்திருப்பதற்கு ஐசிசி அதிருப்தி

  • 11:39 AM

    பயிற்சியில் கலகலப்பு

    உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விராட் கோலி, சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோர் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தபோது....

     

  • 11:38 AM

    அதிக வயது இந்திய கேப்டன்

    உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியை அதிக வயதில் வழிநடத்தும் கேப்டன் ரோகித் சர்மா தான்

     

  • 11:36 AM

    இந்திய அணி வீழ்த்தியதில்லை 

    ஐசிசி நடத்தும் தொடர்களில் நாக்அவுட் சுற்றுகளில் இந்திய அணி ஒருபோதும் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதில்லை. 

     

     

  • 11:35 AM

    இடது கை பேட்டிங் பயிற்சி

    நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கும் நிலையில், விராட் கோலி இடது கை பேட்டிங் பயிற்சி எடுத்திருக்கிறார்.

  • 11:34 AM

    விராட் கோலி - வில்லியம்சன் ஒற்றுமை

    2011 , 2015, 2019, 2023 என தொடர்ச்சியாக நடைபெற்ற அனைத்து உலக கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் விராட் கோலி -வில்லியம்சன் விளையாடுகின்றனர்

     

  • 11:31 AM

    உலக  கோப்பை நாக் அவுட் போட்டிகளில் சதமடித்திருக்கும் ஒரே இந்திய வீரர் ரோகித் சர்மா தான். 

  • 11:29 AM

    டேவிட் பெக்காம், ரஜினிகாந்த், சல்மான் கான், அமீர் கான், ஹர்திக் பாண்டியா, நீதா அம்பானி ஆகியோர் வான்கடேயில் நடக்கும் அரையிறுதிப் போட்டியை நேரில் கண்டுகளிக்க உள்ளனர்

  • 11:28 AM

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் மல்லுகட்ட காத்திருக்கின்றன. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இதுவரை ஒரு உலக கோப்பையை கூட வென்றதில்லை

  • 11:26 AM

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது

Trending News