ரோகித் கூறிய ஒரு ’பாயிண்ட்’ - கேப்டன்ஷிப்பை இழந்த விராட்
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன்ஷிப்பில் இருந்து கோலி நீக்கப்பட்டதற்கு, ரோகித் ஷர்மா தெரிவித்த கருத்தும் காரணமாக இருந்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
விராட் கோலியிடம் (Virat Kholi) இருந்து இந்திய ஒருநாள் போட்டி கேப்டன்ஷிப்பை பிசிசிஐ (BCCI) அண்மையில் பறித்தது, கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, 20 ஓவர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டாம் என விராட் கோலியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், அதனை ஏற்காமல் உலகக்கோப்பைக்கு முன்பாகவே 20 ஓவர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது, பிசிசிஐ-க்கு அதிர்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார். இதனடிப்படையில், வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர்களுக்கு ஒரே ஒரு கேப்டன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 20 ஓவர் மற்றும் 50 ஓவர் இந்திய அணிக்கு ரோகித் ஷர்மாவை கேப்டனாக தேர்வுக்குழு நியமித்துள்ளதாக விளக்கமளித்தார்.
ALSO READ | நான் தலைமை பயிற்சியாளராக இருந்ததில் பலருக்கும் அதிருப்தி- ரவி சாஸ்திரி ஓபன் டாக்!
டெஸ்ட் அணிக்கு விராட் கோலியே கேப்டனாக தொடர்வார் என்றும் கங்குலி கூறினார். கேப்டன்ஷிப் குறித்து விராட்கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோரிடம் பிசிசிஐ ஏற்கனவே விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள கோலி, ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், ரோகித் ஷர்மாவிடம் பிசிசிஐ பேசியபோது வெள்ளைப் பந்து பார்மேட்டுக்கு ஒரே ஒரு கேப்டன் இருப்பது மட்டுமே சிறந்தது. 20 ஓவர் போட்டிக்கான கேப்டன்ஷிப்பை மட்டும் ஏற்பதில் தனக்கு விருப்பமில்லை என கூறியுள்ளார். இருவரின் கருத்துகளையும் கேட்டுக் கொண்ட பிசிசிஐ, உயர்மட்ட அளவிலும் இது குறித்து ஆலோசித்துள்ளது. 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தோல்வி, அந்த தொடருக்கு முன்பாகவே கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்கிறேன் என கோலி அறிவித்ததால் இருந்த அதிருப்தி, ஆகியவற்றை கணக்கில் கொண்ட பிசிசிஐ ரோகித்ஷர்மாவையே கேப்டனாக நியமிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதனடிப்படையிலேயே தென் ஆப்பிரிக்கா தொடருக்கான ஒருநாள் மற்றும் 20 ஓவர் இந்திய அணிக்கு ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR