புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். இரு நாடுகளிலும் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு. இரு நாடுகளிலுமே இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் பார்ப்பதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதும் உற்சாகமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையில் இரு நாடுகளும் மோதின. உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இந்திய அணியை பாகிஸ்தான் முதல் முறையாக தோற்கடித்தது. இப்போது இந்த மாதம் இரு நாடுகளும் மோத உள்ளன.
ஆசிய கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது
இம்மாதம் முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைக்கான 20 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இது தவிர, டிசம்பர் 11 முதல் 19 வரை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA)விளையாடும் 25 பேர் கொண்ட அணியையும் கமிட்டி அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இந்த இரண்டு போட்டிகளும் மிகவும் முக்கியமானவை. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான (Under-19 Cricket World Cup) இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
NEWS: India U19 squad for Asia Cup & preparatory camp announced.
More details https://t.co/yJAHbfzk6A
— BCCI (@BCCI) December 10, 2021
இங்கு இரு அணிகளும் மோதுகின்றன
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை டிசம்பர் 23 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இந்த ஆசியக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் (India vs Pakitan Match) மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் நேருக்கு நேர் காணப் போகிறது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன
19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் கேப்டனாக யஷ் துல் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியக் கோப்பையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, பாகிஸ்தானின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியுடன் டிசம்பர் 25ஆம் தேதி விளையாடவுள்ளது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த அணி டிசம்பர் 27 அன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி, ஜனவரி 1ஆம் தேதி நடைபெறும். ஆசிய கோப்பை டிசம்பர் 23-ம் தேதி தொடங்குகிறது.
FREE ENTRY for ICC Under-19 World Cup matches to be held in the Caribbean next month. Check out Fixtures and don't miss out on the #futurestars of cricket #U19CWC pic.twitter.com/S9R7dpuoOM
— TTCB (@redforcecricket) December 10, 2021
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில் இந்திய அணி அதிகப் பட்டத்தை வென்றுள்ளது. இதுவரை அந்த அணி 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. ஆசிய கோப்பை டிசம்பர் 23ம் தேதி தொடங்குகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு முன், இந்த ஆசியக் கோப்பை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது வீரர்கள், உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு உதவியாக இருக்கும்.
ALSO READ | தோனியை கம்பு எடுத்து துரத்திய ரசிகர்கள்! என்ன ஆச்சு?
இந்திய அணியின் முழு அட்டவணை
23 டிசம்பர் - இந்தியா vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
டிசம்பர் 25 - இந்தியா vs பாகிஸ்தான்
டிசம்பர் 27 - இந்தியா vs ஆப்கானிஸ்தான்
30 டிசம்பர் - அரையிறுதி 1
டிசம்பர் 30 - அரையிறுதி 2
ஜனவரி 1 - இறுதி
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைக்கான இந்திய அணி
ஹர்னூர் சிங் பண்ணு, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, அன்ஷ் கோசாய், எஸ்கே ரஷீத், யாஷ் துல் (கேப்டன்), அனேஷ்வர் கவுதம், சித்தார்த் யாதவ், கௌஷல் தம்பே, நிஷாந்த் சிந்து, தினேஷ் பனா (WK), ஆராத்யா யாதவ் (WK), ராஜாங்கத் பாவா, ராஜ்வர்தன் ஹங்கர், ராஜ்வர்தன் ஹங்கர் சங்வான், ரவி குமார், ரிஷித் ரெட்டி, மானவ் பராக், அம்ரித் ராஜ் உபாத்யாய், விக்கி ஓஸ்ட்வால், வாசு வாட்ஸ் (உடற்தகுதி ஒப்புதலுக்கு உட்பட்டு).
READ ALSO | 1 நகரம், 889 கமாண்டோக்கள், 5000 பாதுகாப்புப் பணியாளர்கள் ஏன் இந்த பலத்த பாதுகாப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR