IPL 2024, Royal Challengers Bangalore: 17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7ஆம் தேதி 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் தற்போது வெளியாகி உள்ளது. இதில் 10 அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்க உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் என அனைத்து அணிகளும் பலமாக காணப்படுகிறது. 2022இல் சாம்பியன் பட்டம் பெற்ற குஜராத் அணி, கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில் தற்போது அதில் ஹர்திக் பாண்டியா, ஷமி ஆகியோர் இல்லாவிட்டாலும் அதைவிட பலமான அணியாக உருவெடுத்திருக்கிறது. 


இப்படி ஒவ்வொரு அணியும் புத்துணர்வு பெற்றிருக்கும் சூழலில் கடந்த 16 சீசனிலும் போராடிக் கொண்டிருக்கும் ஆர்சிபி அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. முதற்கட்ட அட்டவணையில் 5 போட்டிகளில் விளையாடும் ஆர்சிபி, முதல் போட்டியிலேயே சிஎஸ்கேவுடன் மோதுகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணியின் பலம், பலவீனங்களை இங்கு காணலாம். 


மேலும் படிக்க | விராட் கோலி வேண்டுமென ஜெய்ஷாவிடம் மல்லுக்கட்டிய ரோகித் சர்மா! 20 ஓவர் உலக கோப்பை அப்டேட்


ஆர்சிபியின் பலம்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வழக்கம்போல், இந்த முறையும் பேட்டிங்தான் பெரிய பலமாகும். டி20 கிரிக்கெட்டில் அனுபவமும், வலிமையையும் ஒருங்கே பெற்ற அணியாக ஆர்சிபி உள்ளது. ஓப்பனிங்கில் ஃபாப் டூ பிளேசிஸ் - விராட் கோலி இணையே அணிக்கு பலமான அஸ்திவாரத்தை அமைக்கின்றனர். மிடில் ஆர்டரில் கிளென் மேக்ஸ்வெலுடன் கேம்ரூன் கிரீன் கைக்கோர்க்கிறார் இவர்களுக்கு ரஜத் பட்டிதாரும் கைக்கொடுக்க பலமான பேட்டிங் படையே உள்ளது.


ஆர்சிபி பலவீனம்


வழக்கம் போல் பந்துவீச்சில் இம்முறையும் சற்று பலவீனமாகவே காணப்படுகிறது. ஆர்சிபி அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் இல்லை. அல்ஸாரி ஜோசப், பெர்குசன் என பலர் இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா என்பது சந்தேகம்தான். இந்திய மண்ணில் நல்ல ஸ்பின்னர் இல்லாமல் டி20 போட்டிகளுக்குச் செல்வது என்பது மிகவும் கடினமானது. 


என்ன செய்ய வேண்டும்?


இந்த பலவீனங்களை புரிந்துகொண்டு அது அவர்களை பாதிக்காத அளவு பார்த்துக்கொள்ள வேண்டும். கேம்ரூன் கிரீன் பேட்டிங்கை போல பந்துவீச்சிலும் கைக்கொடுக்கும்பட்சத்தில் ஆர்பிசிக்கு பெரிய தலைவலி தீரும். அதேபோல், மேக்ஸ்வெல் கடந்த ஓடிஐ உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சிலும் கலக்கியிருந்தார். எனவே, இவர்கள் 4+4 - 8 ஓவர்களை நன்றாக வீசும்போது பந்துவீச்சு படையும் பலம் பெறும். 


பேட்டிங் ஆர்டர் இன்னும் ஆழமானதாகவும் மாறும் எனலாம். ஆகாஷ் தீப் போன்ற இளம் வீரர் தனது திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூழலில், ஆர்சிபி அணி நிர்வாகமும் அவருக்கான வாய்ப்பை வழங்க வேண்டும். Impact Player லிஸ்டில் யாஷ் தயாள், ஆகாஷ் தீப், சுயாஷ் பிரபுதேசாய் ஆகியோர் இருப்பார்கள். 


ஸ்குவாட்


ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், சுயாஷ் பிரபுதேசாய், சவுரவ் சவுகான், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், மனோஜ் பந்தேஜ், டாம் குர்ரன், ஸ்வப்னில் சிங், வில் ஜாக்ஸ், கேமரூன் கிரீன், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், கர்ன் ஷர்மா,  யாஷ் தயாள், விஜய்குமார் வைஷாக், மயங்க் தாகர், ராஜன் குமார், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, அல்ஸாரி ஜோசப், லாக்கி பெர்குசன்.


பிளேயிங் லெவன் கணிப்பு


ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், கேம்ரூன் கிரீன், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், கர்ன் ஷர்மா, முகமது சிராஜ், அல்ஸாரி ஜோசப்.


மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த அடி! 2 ஸ்டார் பவுலர்கள் காயம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ