’விராட் கோலிக்கு ஓய்வு தேவையா?’ சரமாரியாக விளாசிய ஆர்பி சிங்
பார்ம் அவுட்டில் இருக்கும் விராட் கோலிக்கு அடிக்கடி ஓய்வு கொடுப்பது சரியா? என ஆர்பி சிங் சரமாரியாக பிசிசிஐக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி, அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணியில், விராட் கோலி இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக சரியான பார்ம் இல்லாமல் தவித்து வரும் விராட் கோலிக்கு, அடிக்கடி ஓய்வு கொடுக்கப்படுகிறது. இதனை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பது குறித்து பேசிய ஆர்பி சிங், பார்ம் இல்லாமல் தவித்து வரும் விராட் கோலிக்கு பிசிசிஐ ஓய்வு கொடுப்பது வேடிக்கையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | மீண்டும் சிஎஸ்கே-வில் சுரேஷ் ரெய்னா? சந்தித்துக்கொண்ட தோனி, ரெய்னா!
பார்ம் இல்லாமல் இருக்கும்போது ஒரு வீரர் அதிகமான போட்டிகளில் விளையாடவே விரும்புவார், அப்போது தான் ஃபார்முக்கு திரும்ப முடியும் என்பது அவருக்கு தெரியும் எனக் கூறியுள்ள ஆர்பிசிங், இது விராட் கோலிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சொகுசு வாய்ப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். நான் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடும்போதெல்லாம், எங்களுக்கு ஓய்வு என்பதெல்லாம் கொடுக்கப்படவில்லை. நன்றாக விளையாடுகிறோமா? இல்லையா? என்பது மட்டுமே பார்க்கப்பட்டது.
அப்போது அணியில் இருந்த சீனியர் வீரர்கள் கூட ஓய்வு கேட்தாக தெரியவில்லை. ஆனால், இப்போது பிசிசிஐ கடைபிடிப்பது புதிய நடைமுறையாக இருக்கிறது. விராட் கோலிக்கு உண்மையாகவே காயம் இருந்தால் அவர் ஓய்வு எடுப்பதில் தவறில்லை. ஆனால், ஃபார்ம் இல்லை என்பதற்காக ஓய்வு கொடுக்கிறோம் என்பதெல்லாம் என்ன வகையில் நியாயம். 2 ஆண்டுகள் ஒழுங்காக விளையாடாத ஒருவருக்கு அணியில் மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பதும் எந்த அடிப்படையில்? என்று ஆர்பி சிங் சரமாரியாக கேள்விகளை தொடுத்துள்ளார்.
மேலும் படிக்க | Lalit Modi Assets: மலைக்க வைக்கும் லலித் மோடியின் சொத்து மதிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR