ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2-வில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு பட்டம் கூட வெல்லாத ஆர்சிபி இந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கேற்ப அவர்களுக்கு அதிர்ஷ்டமும் கை கொடுக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


கொல்கத்தாவில் நடைபெற்ற முதாலாவது குவாலிபையர் போட்டியில் லக்னோ அணி கோட்டைவிட்ட கேட்சுகளும், மோசமான பீல்டிங்கும் பெங்களுருவின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது. மேலும், ரஜாட் படிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இறுதிக்  கட்டத்தில் சிறப்பாக விளையாடி 207 ரன்களை குவிக்க வைத்தனர். இது கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்து தோல்வியையும் தழுவ நேரிட்டது.  


மேலும் படிக்க | Watch: ஷிகர் தவானை அடி வெளுத்த அவரின் தந்தை - வைரல் வீடியோ


மோசமான ஃபாரம் காரணமாக தொடர் முழுவதும் தடுமாறி வந்த கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பலம். இதேபோல், டூபிளசிஸ் மற்றும் தினேஷ் கார்த்திக், படிதார், மேகஸ்வெல் சிறப்பாக இன்றைய போட்டியிலும் விளையாடினால் அர்சிபியின் ரன்வேட்டையை ராஜஸ்தான் தடுப்பது கடினம். பந்துவீச்சில் ஹர்ஷல் படேல், ஹேசில்வுட், சிராஜ் ஆகியோர் ஜொலிக்கின்றனர். சுழறபந்துவீச்சில் ஹசரங்கா நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். 



அதேநேரத்தில் ராஜஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அணிகளில் இதுவும் ஒன்று. பட்லர், படிக்கல், சாம்சன், ஹெட்மயர் என அதிரடி பட்டாளமே இருக்கிறது. இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் பட்லர். பந்துவீச்சில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹல், அஸ்வின் மற்றும் போல்ட் ஆகியோர் இருக்கின்றனர். வெற்றிக்கு முழு பலத்தையும் இறக்க ராஜஸ்தானும் தயாராக இருப்பதால், பெங்களுரு அணி இவர்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்படி செய்தால் மட்டுமே ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற முடியும். செய்வார்களா? என்பதை ஆர்சிபி ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஆர்பிசி 13 வெற்றிகளும், ராஜஸ்தான் 11 வெற்றிகளும் பெற்றிருக்கின்றன. 


மேலும் படிக்க | RCB vs LSG: ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ரஜத் படிதார் - யார் இவர்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

 

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

 

Apple Link - https://apple.co/3loQYeR