Watch: ஷிகர் தவானை அடி வெளுத்த அவரின் தந்தை - வைரல் வீடியோ

ஷிகர் தவானை அவரின் தந்தை அடி வெளுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 26, 2022, 10:08 AM IST
  • ஷிகர் தவான் இன்ஸ்டாகிராம் வீடியோ
  • தவானை அடிக்கும் அவரின் தந்தை
  • பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்
Watch: ஷிகர் தவானை அடி வெளுத்த அவரின் தந்தை - வைரல் வீடியோ  title=

ஐபிஎல் போட்டி முடிந்தவுடன் பயோ பபிளில் இருந்து வெளியேறிய வீரர்கள் ஜாலி மோடுக்கு திரும்பியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். சில வீரர்கள் ஆங்காங்கே சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ள நிலையில், ஷிகர் தவானை அவரின் தந்தை அடி வெளுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஷிகர் தவானை தாக்கும் தந்தை மொஹிந்தர்பால், யார் சொல்லியும் கேட்பதாக தெரியவில்லை.

மேலும் படிக்க | RCB vs LSG: ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ரஜத் படிதார் - யார் இவர்?

தவானை கீழே தள்ளி எட்டி உதைக்கிறார். தவானும் அடி வாங்கிக் கொண்டு கீழே படுத்து இருக்கிறார். எதற்காக என்று விசாரிக்கும்போது, ஐபில் போட்டியில் ஒழுங்காக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் தோல்வி அடைந்துவிட்டு வீட்டுக்கு தவான் திரும்பிவிட்டதால் கோபமடைந்து விட்டாராம். இதனால் தவானை அடித்து உதைத்திருக்கிறார்.

காமெடிக்காக உருவாக்கப்பட்ட வீடியோ என்றாலும் இணையவாசிகளால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது. தவான் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அவரிடம் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. எதாவது ஒரு விளையாட்டுத் தனமான ஒரு விஷயத்தை செய்து அதனை வீடியோவாக இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ அணிக்காக களமிறங்கினார். தொடர் முழுவதும் ஒரு சில போட்டிகளைத் தவிர சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இரண்டு அரைசதங்களையும் விளாசினார்.

20 ஓவர் கிரிக்கெட்டுக்கான இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அவருக்கு, தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்க | ’ஆர்சிபி..ஆர்சிபி..ஆர்சிபி’ ரசிகர்களின் கோஷத்தால் வென்ற பெங்களுரு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News