Asia Cup: 8 விக்கெட் வித்தியாசத்தில் பாக்கிஸ்தான் அபார வெற்றி!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாக்கிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாக்கிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது!
ஆசியாவின் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் செப்டம்பர் 15-ஆம் நாள் துவங்கி செப்டம்பர் 28-ஆம் நாள் வரை நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் பாக்கிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் தேர்வு சேய்து விளையாடியது.
ஆரம்பம் முதலே சொதப்பலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்து ஹாங்காங் அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்துச் சென்றனர். ஹாங்காங் அணி தரப்பில் கின்ட்சி ஷா 26(50) மற்றும் அசைஸ் கான் 27(47) மட்டுமே 20 ரன்களை தாண்டினர். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனையடுத்து ஆட்டத்தின் 37.1-வது பந்தில் ஹாங்காங் அணி 116 ரன்கள் எடுத்த நிலையில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாக்கிஸ்தான் அணி தரப்பில் உஸ்மான் கான் 3 விக்கெட்டுகளை குவித்தார்.
இதனையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாக்கிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய இமாம் உல் ஹக் ஆட்டமிழக்காமல் 50(69) ரன்கள் எடுக்க பாக்கிஸ்தான் அணி 23.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் பாக்கிஸ்தான் அணி 120 ரன்கள் குவித்தது. இதனையடுத்து பாக்கிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று.