ருதுராஜூக்கு வந்த சோதனை - வாய்ப்பு கிடைத்தும் அதிர்ஷ்டம் இல்லாத இந்திய வீரர்
இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தும், சந்தர்ப சூழ்நிலையால் களத்தில் இறங்க முடியாமல் இருக்கும் வீரராக உள்ளார் ருதுராஜ் கெய்வாட்
இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ருதுராஜ் கெய்க்வாட், மணிகட்டில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து பேசிய பிசிசிஐ செய்தித் தொடர்பாளர், வலது மணிக்கட்டு வலி காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | INDvsSL: இந்திய அணியில் காத்திருக்கும் மிகப்பெரிய மாற்றம் - ரோகித் முடிவு
மேலும், அவருக்கான மருத்துவ உதவிகளை பிசிசிஐ வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட்டை பொறுத்தவரை அண்மைக்காலமாக அதிர்ஷ்டம் இல்லாத வீரராக மாறியுள்ளார். இந்திய அணியில் விளையாடுவதற்கு பல முறை அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் களத்தில் இறங்கும் வாய்ப்பு என்பது தள்ளிப் போய்க்கொண்டே செல்கிறது. நியூசிலாந்து 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அவருக்கு பிளேயிங் 11-ல் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் இடம்பிடித்தபோதும் ருத்ராஜ் களமிறக்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறும்போது கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அந்த அணிக்கு எதிரான ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடிய ருதுராஜ், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைத்தபோதும் வலது மணிக்கட்டு காயம் காரணமாக, போட்டியில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR