ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பராக இருந்த ரியான் கேம்பெல், நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சையில் இருக்கும் அவர் சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக கேம்பெல் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மரணத்தில் இருந்து மீண்டுள்ளார் 


மாரடைப்பு ஏற்பட்ட பிறகு ராயல்ஸ்டோக் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரியான் கேம்பெல். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், சுய நினைவுக்கு திரும்பியுள்ள அவர், இன்னும் சிகிச்சையில் இருக்க வேண்டியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. குடும்பத்தினர் கூறும்போது, கேம்பெல் சுயநினைவுக்கு திரும்பியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். பேசினாலும், சற்று பலவீனமாக இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், விரைவில் முழுமையாக குணமடைவார் என கூறியுள்ளனர்.


மேலும் படிக்க ராஜஸ்தான் வீரர்களை ’சேட்டன்’காஸ்டியூமுக்கு மாற்றிய சாம்சன் 


எப்போது ஏற்பட்டது?


ர்ரியான் கேம்பெல்லுக்கு 50 வயதாகிறது. கடந்தவாரம் குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருந்தபோது திடீரென நெஞ்சுவலியும், மூச்சுவிடுவதில் சிரமமும் ஏற்பட்டுள்ளது. சற்றும் தாமதிக்காத குடும்பத்தினர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரச சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். 



ஆஸ்திரேலிய அணியில்


ரியான் கேம்ப்பெல் மேற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார். 12 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய அவர், மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக 98 முதல் தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் 11 சதங்களுடன் 6009 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சர்வதேச அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 54 ரன்களும், 3 டி20 போட்டிகளில் 26 ரன்களும் எடுத்தார். காம்ப்பெல் ஜனவரி 2017-ல் நெதர்லாந்தின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.


மேலும் படிக்க | ரிஷ்ப் பன்டுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்ட அஸ்வின் வீடியோ


ஹாங்காங் அணி


கேம்ப்பெல் ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் என இரு அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். 2002 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமானார். அதன் பிறகு அவர் ஹாங்காங் அணியில் விளையாடத் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR