கிரிக்கெட் உலகின் கடவுளாகவே போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரால் தேடப்பட்ட நபர் சென்னை பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத் என தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடிய ஒரு போட்டியின் போது சென்னை 5 ஸ்டார் சொகுசு ஹோட்டலான தாஜ் கோரமண்டல் (Taj Coromandel) நிறுவன ஊழியர் ஒருவர் கிரிக்கெட் உலகின் கடவுளாகவே போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரருக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அது அறிவுரை சச்சினுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் அவர் யார் என்று சச்சினுக்கு தெரியவில்லை. அந்த ஊழியரின் பெயர் கூட அவருக்கு தெரியாது. ஆனால் அவரை சந்திக்க சச்சின் டெண்டுல்கர் ஆசை படுகிறார். அந்த ஊழியரை கண்டுபிடிக்க உதவமாறு நெட்டிசன்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். 


அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்ட குறுந்தகவல் ஒன்றை இணையவாசிகள் வைரல்  ஆக்கியுள்ளனர்.


"எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. IND vs WI தொடரின் போது சென்னை Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய அறிவுரை மிகவும் உதவியது. அவரை இப்போது சந்திக்க ஆசை படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவவேண்டும்." 


என டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 


 



 


இந்நிலையில், சச்சின் சந்திக்க விரும்பிய நபர் சென்னை பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத் என்று தற்போது தெரியவந்துள்ளது.