புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், அதற்கு அவரது மனைவி சாக்ஷி தோனின் எதிர்வினையும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டன் எம்.எஸ்.தோனி. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு வீடியோ மூலம், ஓய்வு பெறுவதாக  தோனி அறிவித்தார்.
அந்த பதிவில் பதிலளித்த தோனியின் மனைவி சாக்‌ஷி, கருத்துப் பிரிவில் ஒரு இதய ஈமோஜியை எமோஷனாக பதிவிட்ட்டுள்ளார்.



கடந்த ஆண்டு ஆகஸ்டில் நியூசிலாந்திற்கு எதிரான ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இல், இந்திய அணி அரையிறுதியில் வெளியேறியதில் இருந்து தோனி பெரிய அளவில் சோபிக்கவில்லை.
2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்திருக்கும் 39 வயதான தோனி, இந்திய ராணுவத்தின் சிறப்பு கெளரவத்தைப் பெற்று பணியாற்றியுள்ளார்.


தல தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13 வது பதிப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார்.   


Real Also | Breaking : தல MS Dhoni சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு