இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் நடைபெற்ற டி20 லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் இந்திய கிரிக்கெட்டின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு தேர்வு செய்யபட்டார். அவர் புதுச்சேரியில் நடைபெறும் இந்தியா 19 - ஆஸ்திரேலியா 19 அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக சமித் டிராவிட் இப்போது முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமித் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) தங்கியுள்ளார். அங்கு அவருக்கு முழங்கால் காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க | IPL 2025: மும்பையை விட்டு விலகி லக்னோ அணியில் இணையும் ரோஹித் சர்மா?


ராகுல் டிராவிட் மகன் காயம்


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இளையோர் கிரிக்கெட்டில் விளையாட ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரத்தில் சமித் டிராவிட்டுக்கு முழங்கால் காயம், இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இருந்து விலக வைத்திருக்கிறது. இரண்டாவது போட்டிக்குள் அவர் காயத்தில் இருந்து குணமடைந்துவிடுவாரா? என்பது கேள்விக்குறி தான். இதுகுறித்து பிசிசிஐ கூறும்போது, "சமித் டிராவிட்டுக்கு ஸ்கேன் செய்யப்பட்டதில் அவருக்கு காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவாக குணமடைவதற்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன." என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி புதுச்சேரியில் நடைபெற இருக்கும் நிலையில், இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது. 


பயிற்சியளிக்கும் ராகுல் டிராவிட்


சமித் டிராவிட்டை பொறுத்தவரை  அவரது தந்தையே அவருக்கு சிறந்த பயிற்சியாளராக இருக்கிறார். ஏனென்றால் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் தான் இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பையை வென்றது. அந்த வெற்றியுடன் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயிற்சியில் இருந்து விலகுவதாகவும் டிராவிட் அறிவித்தார். அத்துடன் இப்போது ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். அந்த அணிக்கு எதிர் வரும் ஐபிஎல் 2025 தொடரில் பயிற்சியளிக்க இருக்கிறார் டிராவிட். அதனால் இவ்வளவு பெரிய பிளேயரின் மகனாக இருக்கும் சமித்துக்கு மற்ற இளைஞர்களைக் காட்டிலும் உயர்தரமான பயிற்சிகள் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் ஆட முடியாமல் போனாலும், அடுத்தடுத்து சமித் டிராவிட்டுக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. 


மேலும் படிக்க | பிட்டாக மற்றும் பளபளப்பாக இருக்க ஸ்மிருதி மந்தனாவின் வொர்க்அவுட் சீக்ரெட்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ