IPL 2025: மும்பையை விட்டு விலகி லக்னோ அணியில் இணையும் ரோஹித் சர்மா?

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் 2025க்கான தக்கவைப்பு விதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் வீரர்கள் வேறு அணிக்கு மாறுவது குறித்த பேச்சு எழுந்துள்ளது.

 

1 /6

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் 2025க்கான தக்கவைப்பு விதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் வீரர்கள் வேறு அணிக்கு மாறுவது குறித்த பேச்சு எழுந்துள்ளது.  

2 /6

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி, ஐபிஎல் 2025ல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது.  

3 /6

கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை அந்த பதவியில் இருந்து நீக்கியது அணி நிர்வாகம். புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது.  

4 /6

2 ஆண்டுகள் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் மீண்டும் மும்பை அணியில் இணைந்தார். ஆனால் இதனை ரசிகர்கள் மற்றும் ரோஹித் சர்மா விரும்பவில்லை.   

5 /6

இதன் காரணமாக ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பு, ரோஹித் சர்மா மும்பை அணியை விட்டு வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. பல அணிகள் சொல்லப்பட்ட நிலையில் தற்போது லக்னோ அணியில் இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது.  

6 /6

இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல்லில் என்ன முடிவை எடுக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.