குஜராத் வீரர் சமித் கோகேல் உலக சாதனை
ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் அசத்திய குஜராத் வீரர் சமித், 359 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்து, கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தவர் என்ற உலக சாதனை படைத்தார்.
புதுடெல்லி: ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் அசத்திய குஜராத் வீரர் சமித், 359 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்து, கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தவர் என்ற உலக சாதனை படைத்தார்.
ஜெய்ப்பூரில் நடக்கும் காலிறுதியில் ஒடிசா, குஜராத் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் குஜராத் 263, ஒடிசா 199 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், குஜராத் அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 541 ரன்கள் எடுத்திருந்தது. சமித் கோயல் (261), ஹர்திக் படேல் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
5 நாள் ஆட்ட முடிவில் குஜராத் அணி 705 ரன்களை ஒடிசாவுக்கு இலக்காக நிர்ணயித்திருக்கிறது. அதிக ரன்கள் குவித்ததன் மூலம் குஜராத் அணி அரை இறுதிக்குள் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.