இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியா-விற்கு அனைத்து விதமான போட்டிகளிலும் ஈடுபட இரண்டு ஆண்டுகள் தடை விதிப்பதாக ICC உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபகாலமாகவே ஊழல் மற்றும் சூதாட்டத்தில் சிக்கி இலங்கை கிரிக்கெட் வாரியம் தவித்து வருகிறது. இதற்கிடையில் அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சனத் ஜெயசூரியா, ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.


இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஊழல் தடுப்பு அமைப்பு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், சனத் ஜெயசூரியாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட ICC தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.



இதுதொடர்பாக ICC வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது.. "ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழலுக்கு எதிரான நடத்தை விதிகளை மீறியது" உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சனத் ஜெயசூரியா-விற்கு அனைத்து விதமான போட்டிகளிலும் ஈடுபட இரண்டு ஆண்டுகள் தடை விதிகப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


49-வயது ஆகும் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜெயசூரியா, 445 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 21 சதங்கள் மற்றும் 323 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணியிலும் இடம்பெற்றவர்


இதனையடுத்து சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் கடந்த 2011-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.