புதுடெல்லி: ஐபிஎல் 2021 இன் 36 வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியால் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் டெல்லி (Delhi Capitals) அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக ராஜஸ்தான் (Rajasthan Royals) அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாம்சனுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு தலா ரூபாய் 6 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஐபிஎல் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. 


ALSO READ | ஹோல்டரின் சிக்ஸ்சர்கள் வீண்! பஞ்சாப்பிடம் தோற்றது ஹைதராபாத்!


முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சுக்கு தாமதமானதால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் சஞ்சு இந்த சீசன் இல் தனது அணியிடமிருந்து இந்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க முயற்சி செய்வார், இல்லையெனில் தண்டனை அதிகரிக்கலாம், மேலும் அவருக்கு ஒரு போட்டி தடை கூட கிடைக்கலாம்.


ஐபிஎல் 2021 ஆம் ஆண்டின் 36 வது போட்டியில் ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் பந்துவீச்சாளர்களின் பலத்தால் ராஜஸ்தான் ராயல்ஸை டெல்லி கேபிடல்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியால் 20 பந்துகளில் 121 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது, கேப்டன் சஞ்சு சாம்சன் 53 பந்துகளில் எட்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரின் உதவியுடன் 70 ரன்கள் எடுத்து இருந்தார். டெல்லி தரப்பில் அன்ரிச் நோர்கியா இரண்டு விக்கெட்டுகளையும், அவேஷ் கான், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா மற்றும் அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


ALSO READ மீண்டும் முதல் இடம் பிடித்த டெல்லி! ராஜஸ்தானிடம் எளிதான வெற்றி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR