வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை வென்ற பிறகு அந்நாட்டு அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாட தொடங்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பர்படாஸில் இருக்கும் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் பேட்டிங் ஆடி வருகிறது. இப்போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் இம்முறையும் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவுடன் விளையாடும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி தேதி மாற்றம்...? பிரச்னை இதுதான்!


சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு


ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன் எப்படி விளையாடினாலும் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். அவ்வப்போது அவருக்கு வாய்ப்பு வழங்கினாலும், தொடர்ச்சியாக சீனியர் அணியில் வாய்ப்பு கொடுப்பத்தில்லை. கே.எல்.ராகுல் இருந்தால் அவர் பிரதானமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இரண்டு சிரீஸ்கள் விளையாட வில்லை என்றால் கூட அவருக்கு மூன்றாவது சிரீஸில் நம்பிக்கை வைத்து இந்திய அணியின் தேர்வாளர்கள் வாய்ப்பு கொடுக்கின்றனர். ஆனால், ஓரிரு போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை என்றால் வெளியே உட்கார வைக்கப்படுகிறார்.


ரோகித் சர்மாவின் திட்டம்


மற்ற பிளேயர்கள் ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடிவிட்டால் கூட வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஒரு வழியாக இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும் பிளேயிங் லெவனில் ஆட வைப்பத்தில்லை. கடந்த சில சீரிஸ்களில் இஷான் கிஷன் ஒழுங்காக விளையாடவில்லை. அப்போது அவரை அணியில் இருந்து நீக்கி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதனை பொருட்படுத்தாத ரோகித் சர்மா தொடர்ச்சியாக இஷான் கிஷனுக்கு அனைத்து வடிவங்களிலும் வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர் என அனைத்து இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்துவிடுகிறார்.


நல்ல பிளேயர்களுக்கு வாய்ப்பில்லை


ஆனால், ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் சதமாக அடித்தாலும் சர்பிராஸ் கான் போன்ற வீரர்களுக்கு இந்திய அணி வாய்ப்பு என்பது கனவாகவே இருக்கிறது. இது சஞ்சு சாம்சனுக்கும் பொருந்தும். இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மாறாக இஷான் கிஷன் அவரது இடத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு சில வாய்ப்புகள் கூட கொடுக்காமல், அணி சார்பில் இருந்து நம்பிக்கையும் கொடுக்காமல் தொடர்ச்சியாக நல்ல பிளேயரான சஞ்சு சாம்சன் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு வருவதாக அனைத்து தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில் அதனை நிரூபிக்கும் வகையிலேயே இந்திய அணியின் பிளேயிங் தேர்வும் இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கோபத்துடன் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், சஞ்சு சாம்சன் மீது அப்படி என்ன தீராத கோபம் ரோகித் சர்மாவுக்கு என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.


மேலும் படிக்க | அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் கோலிக்கு 2வது இடம்! முதல் இடத்தில் யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ