உலக கோப்பையில் இடமில்லை என்றாலும் இந்திய அணிக்கு கேப்டனான சஞ்சு சாம்சன்!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணிக்கு கேப்டனாக இருப்பார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் செப்டம்பர் 22ஆம் தேதியும், அடுத்த இரண்டு ஆட்டங்கள் செப்டம்பர் 25 மற்றும் 27ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் பிரித்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர் மற்றும் உம்ரான் மாலிக் போன்ற வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
சஞ்சு சாம்சன் தலைமையில் இந்திய ஏ அணி, நியூசிலாந்து ஏ அணியுடன் செப்டம்பர் 22-ம் தேதி முதல் மூன்று ஒரு நாள் ஆட்டங்களில் மோதுகிறது. மேலும் இந்த தொடரில் திலக் வர்மா, ராஜ் அங்கத் பாவா போன்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை அணியின் வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று நான்கு நாள் போட்டிகள் மற்றும் ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியது. தற்போது மூன்றாவது அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா ஏ ஒரு நாள் அணி: பிரித்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ரஜத் படிதார், சஞ்சு சாம்சன் (கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், ஷாபாஸ் அகமது, ராகுல் சாஹர், திலக் வர்மா, குல்தீப் சென், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி, ராஜ் அங்கத் பாவா
இந்தியா A vs நியூசிலாந்து A ஒரு நாள் போட்டிகள்:
1வது 1 நாள் ஆட்டம்: செப். 22: எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
2வது 1 நாள் ஆட்டம்: செப்., 25ல்: எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
3வது 1 நாள் ஆட்டம்: செப். 27: எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ