அப்பா ஆகிறாரா சஞ்சு சாம்சன் ; வாரிசு எப்போது? - கிறிஸ்துமஸில் சூசக பதிவு!
இந்திய வீரர் சஞ்சு சாம்சனின் மனைவி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், விரைவில் சஞ்சு சாம்சன் தந்தையாக போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.
இந்திய வீரரும், அதிரடி பேட்டரான சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்தவர். இவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில், இவருக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் அதிகம்.
இவர் எங்கு விளையாட சென்றாலும் அங்கு சஞ்சு சாம்சனின் பெயர் தாங்கிய போஸ்டரையோ, பேனரையோ பார்வையாளர்கள் மத்தியில் கண்டிப்பாக காண முடியும். குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிபா கால்பந்து உலக்கோப்பை கால்பந்து தொடரின் மைதானத்தில் ரசிகர்கள் சஞ்சு சாம்சனை புகழந்து பேனர் வைத்திருந்தது வைரலானது.
மேலும் படிக்க | IND vs BAN : இவருக்கா தொடர் நாயகன் விருது... என்ன செய்து கிழித்தார்?
இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமிருந்தாலும், இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் குறைவாக அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. ஒருநாள், டி20 அரங்கில் சிறந்த வீரரான இவருக்கு பதில் ரிஷப் பண்டிற்கு இந்திய அணி அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்பதால் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என பேச்சுகள் உள்ளன.
இந்நிலையில், சஞ்சு சாம்சனின் மனைவி சாருலதா, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவர் சாம்சன், கிறிஸ்துமஸ் மரத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதை பார்த்த அவரின் ரசிகர்கள் சஞ்சு சாம்சனின் மனைவி கர்ப்பமடைந்திருப்பதாகவும், சஞ்சு சாம்சன் விரைவில் தந்தையாக போகிறார் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த தகவல் குறித்த உண்மைத்தன்மை தெரியவில்லை என்றாலும், சஞ்சு சாம்சனுக்கு வரும் ஆண்டு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்க உள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் ஸ்குவாடில் சஞ்சு சாம்சன் நிச்சயம் இடம்பிடிப்பார் என்றும் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் என்றும் பலரும் கூறி வருகின்றனர். மேலும், கடந்த ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை ராஜஸ்தானை கொண்டு வந்த சாம்சன், வரும் சீசனில் நிச்சயம் கோப்பையை முத்தமிடும் முனைப்பில் உள்ளார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | டெல்லியின் பிளானை தூள் தூளாக்கிய மும்பை இந்தியன்ஸ்! இதுதான் சம்பவம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ