நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  முதல் தர கிரிக்கெட்டில் போராடி இந்த டெஸ்டில் இடம் பிடித்த சர்ஃபராஸ் கான் இரண்டு இன்னிங்சிலும் தனது திறமையை நிரூபித்தார். முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் சர்ஃபராஸ் கான். டெஸ்ட் போட்டியில் அவரின் ஆட்டம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.  இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.  முதல் இன்னிங்சில் ரன் அவுட் ஆனா சர்பராஸ், இரண்டாவது இன்னிங்சில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் தனக்காக இடத்தை பதிவு செய்துள்ளார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நான் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன்? தோனியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீரர்!


தற்போது சர்ஃபராஸ் கானை தங்களது அணியில் எடுப்பதற்காக பல ஐபிஎல் உரிமையாளர்கள் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2024க்கு முன் நடந்த மினி ஏலத்தில் சர்பராஸ் கான் அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்திற்கு ஏலம் போகாமல் போனார். இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2024 போட்டியில் அவரை தங்கள் அணியில் எடுக்க முடியும்.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவர்களின் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் முயற்சியில் சர்ஃபராஸை ஒப்பந்தம் செய்ய தயாராக உள்ளது. அதே சமயம் எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இவரை அணியில் எடுக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.  


அதே போல, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சர்பராஸ் கானை தங்கள் அணியில் எடுக்க போட்டியிடுகிறது. சர்ஃபராஸ் கான் 2015 முதல் 2018 வரை ஆர்சிபி அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் டிரேட் விண்டோ ஐபிஎல் 2024 தொடங்கும் வரை திறந்திருக்கும். ஐபிஎல் மினி ஏலம் முடிந்து வீரர்கள் அந்தந்த ஐபிஎல் அணிக்காக விளையாட உள்ள நிலையில், அவர்களது பர்ஸில் பணம் இருந்தாலும் சர்பராஸ்கானை வெறுமென வாங்கி கொள்ள முடியாது.  ஐபிஎல் விதிகளின்படி, ஐபிஎல் ஏலம் முடிந்த பிறகு, அணியில் இருக்கும் ஒருவர் காயம் அடைந்தாலோ அல்லது சீசன் தொடங்குவதற்கு முன்பு போட்டியில் இருந்து விலகினாலோ மட்டுமே ஒரு அணியால் வேறு ஒரு வீரரை ஒப்பந்தம் செய்ய முடியும். 


ஐபிஎல் ட்ரேட் விண்டோ மூலம் சர்ஃபர்ஸ் கானை எந்த ஒரு ஐபிஎல் அணியாலும் மாற்றி கொள்ள முடியாது. ஏனெனில் தங்கள் அணியில் உள்ள ஒரு வீரரை மற்றொரு அணிக்கு மாற்றி கொள்ளலாம். ஆனால் சர்ஃபராஸ் தற்போது எந்த ஒரு அணியிலும் இல்லாத காரணத்தால் அவரை ட்ரேட் விண்டோ மூலம் பெற முடியாது. சர்ஃபராஸ் கான் 2015 முதல் 2023 வரையில் 50 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி ஒரு தனி அரைசதத்துடன் 585 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக டெல்லி அணியில் சேர்வதற்கு முன்பு 2019 மற்றும் 2021 வரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.


மேலும் படிக்க | IND vs ENG: 4வது டெஸ்டில் பும்ரா விலகல்! இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடரவும்..




 


வாட்ஸ்-அப் -  https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!