புதுடெல்லி: மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றில் உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட்டது. மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது பி்சிசிஐயில் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தால் மூன்று ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் பதவி வகிக்க முடியும் என்று விதி உள்ளது. பதவிகளை ஒருவரே தொடர முடியாத வகையில் கட்டாய இடைவெளி விட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதனை மாற்றுவதற்காக, பிசிசிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த மனுவில், கிரிக்கெட் சங்கங்களில் பதவி வகிப்பதில் கட்டாய இடைவெளி விடவேண்டும் என்ற விதியை மாற்ற அனுமதிக்கும்படி பிசிசிஐ கோரிக்கை விடுத்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சட்ட விதிகளை மாற்ற பிசிசிஐக்கு அனுமதி அளித்துள்ளது. 



இதனால், கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா உட்பட பலருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் வாய்ப்புகள் உறுதியாகிவிட்டது. மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஆறு ஆண்டுகள் மற்றும் பிசிசிஐயில் ஆறு ஆண்டுகள் என நிர்வாகிகள் 12 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.


பிசிசிஐயில் ஒருவர் ஒரு பதவியில் இரண்டு முறை தலா 3 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற சட்ட அமர்வு தெரிவித்துள்ளது. சௌரவ் கங்குலி, ஜெய் ஷா ஆகியோரின் கூலிங்-ஆஃப் காலத்தை திருத்துவதற்கான பிசிசிஐயின் முன்மொழிவை எஸ்சி ஏற்றுக்கொண்டது மிகப் பெரிய முடிவாக பார்க்கப்படுகிறது.  


மேலும் படிக்க | என்னைவிட அவர்தான் பெஸ்ட் - கோலிக்கு சர்ட்டிஃபிக்கேட் கொடுத்த கங்குலி


BCCI தனது சட்டங்களை திருத்துவதற்கு இந்த தீர்ப்பு அனுமதிக்கிறது, "இந்த திருத்தம் அசல் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யாது என்று நாங்கள் கருதுகிறோம். முன்மொழியப்பட்ட திருத்தத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 


ஒரு முக்கிய தீர்ப்பில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தங்களது உயர் பதவிகளில் தொடர இந்திய உச்ச நீதிமன்றம் வழி வகுத்திருப்பதற்கு பரவலான எதிர்வினைகள் வந்துள்ளன.  


மூன்று வருட கூலிங் ஆஃப் காலத்தை ரத்து செய்ய ஒப்புக்கொண்ட நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான சட்ட அமர்வு, பிசிசிஐயில் உள்ள அலுவலகப் பணியாளர்கள் நீண்ட காலம் நீடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று வாய்மொழியாக ஒப்புக்கொண்டது. பிசிசிஐ அல்லது மாநில சங்கத்தில் ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை முடித்த பின்னரே கூலிங்-ஆஃப் காலம் நடைமுறைக்கு வர வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


மேலும் படிக்க | நீரஜ் சோப்ராவா, ஆசிஷ் நெஹ்ராவா ? :பாக். நபருக்கு குட்டு வைத்த சேவாக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ