அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சால் அச்சம்: உலகக் கோப்பைக்கு முன் New Zealand வீரரின் வெளிப்பாடு
அடுத்த மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்திய பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமாக விளையாடியுள்ளனர்.
புதுடெல்லி: அடுத்த மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்திய பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமாக விளையாடியுள்ளனர். இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, இந்திய பந்துவீச்சாளர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்திய பந்து வீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சுழல் ஜோடி பல ஆண்டுகளாக பெரும் வெற்றிகளை ஈட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஸ்வின்-ஜடேஜா ஜோடியின் அச்சத்தில் நியூசிலாந்து
நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஹென்றி நிக்கோல்ஸ் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் திறன் தங்கள் நாட்டின் உலகத் தரம் வாய்ந்த ஸ்விங் பந்து வீச்சாளர்களுக்கு சமமாக உள்ளது என்று கூறியுள்ளார். அவர் மற்றொரு சுவாரசியமான விஷயத்தைப் பற்றியும் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில், தங்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சுழல் பந்து வீச்சைப் பற்றிய அச்சம் அதிகமாக உள்ளது என அவர் தங்கள் அணியின் அச்சத்தைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஜோடியின் பந்துவீச்சால் ஏற்படக்கூடிய ஆபத்து பற்றிய கவலை தங்களை வாட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
WTC இன் முதல் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சவுத்தாம்ப்டனின் ஏஜிஸ் பவுல் மைதானத்தில் மோதும். இந்த மைதானத்தின் பிச் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் நியூசிலாந்தின் ஒரு வீர்ர பி.டி.ஐ-யிடம் பேசுகையில், "இந்தியா மிக நல்ல ஃபாஸ்ட் பவுலிங் தாக்குதலைக் கொண்டுள்ளது. மேலும் அவர்களிடம் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா (Jadeja) ஆகியோரும் உள்ளனர். அவர்கள் உலகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நன்றாக விளையாடி உள்ளார்கள். அவர்களது பந்துவீசு அற்புதமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
ALSO READ: Test Championship இறுதிபோட்டி டிரா அல்லது டை ஆனால், எந்த அணி பட்டம் வெல்லும்
வேகப்பந்து வீச்சாளர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர்
காயங்கள் குறித்த புகார்கள் ஏதும் இல்லாமல் இருந்தால், ஜூன் 18 ஆம் தேதி தொடங்கும் போட்டிக்கு இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகிய மூவரும் இருப்பார்கள். நியூசிலாந்து வீரர் கூறுகையில், " முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் பல ஆண்டுகளாக தங்கள் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ட்ரெயின் போல்ட், டிம் சவுதி மற்றும் நீல் வாக்னர் ஆகியோருக்கு நிகரானவர்கள்." என்றார்.
நியூசிலாந்து சிறப்பான பயிற்சியை செய்து வருகிறது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான (World Test Championship) சிறப்பான பயிற்சியில் நியூசிலாந்து அணி ஈடுபட்டுள்ளது. தாங்கள் ஆடவிருக்கும் மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்பதால் அதற்கேற்றபடி பயிற்சியை மேற்கொண்டு வருவதாக நியூசிலாந்து அணி வீரர்கள் தெரிவித்தனர்.
"இங்கிலாந்து வருவதற்கு முன்பு, நாங்கள் எங்கள் பயிற்சி முகாமிலும் இந்த அடிப்படையிலான பயிற்சியைத்தான் எடுத்தோம். இதனுடன் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்து வீச்சுக்கு தயாராவதற்கும் நாங்கள் தனிப் பயிற்சி எடுத்து வருகிறோம்" என்றார் நியூசிலாந்து அணி வீரர்.
ALSO READ: World Test Championship-க்கு முன்னர் லுக்கை மாற்றிய ரவீந்திர ஜடேஜா: போட்டோ வைரல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR