2020-US ஓபனில் பங்கேற்க விரும்புவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்...
கொரோனா பீதிக்கும் மத்தியில் 2020 US ஓபனில் பங்கேற்க விரும்புவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.
கொரோனா பீதிக்கும் மத்தியில் 2020 US ஓபனில் பங்கேற்க விரும்புவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.
2020 US ஓபனில் பங்கேற்க இருப்பதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். மூடிய கதவுகளுக்கு பின்னர் தொடர் நடைபெறும் என அறிவித்ததை அடுத்து முன்னணி நட்சத்திரங்கள் இந்த தொடரில் பங்கேற்பது கடினம் என செய்திகள் வெளியான நிலையில் முன்னாள் உலகின் நம்பர் 1 வீரங்கனையின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பார்வையில் இவர் தான் சிறந்த பீல்டர்...
செரீனா வில்லியம்ஸின் இந்த அறிவிப்பு USTA மற்றும் US ஓபன் அமைப்பாளர்களுக்கு பெரும் ஊக்கத்தையும், நம்பிக்கையும் அளித்துள்ளது. செரீனா US ஓபன் தொடருக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளது மற்ற ஆட்டக்காரர்களின் வருகைக்கும் ஒரு அழைப்பாய் அமையும் எனவும் அமைப்பாளர்கள் நம்புகின்றனர்.
இதுதொடர்பான அறிவிப்பில் செரீனா தெரிவிக்கையில்., "நான் நியூயார்க்கிற்கு சென்று US ஓபனில் விளையாட காத்திருக்கிறேன். எல்லாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து USTA ஒரு அற்புதமான வேலையைச் செய்யும் என நம்புகிறேன். எனினும் போட்டியின் போது நான் நிச்சயமாக என் ரசிகர்களை தவறவிடுவேன். என்றாலும் பரவாயில்லை நான் தொடரில் பங்கேற்க இருப்பதை எண்ணி உற்சாகமாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் எதிர்கொண்ட கடுமையான பந்துவீச்சாளர் இவர்தான்; மனம் திறக்கும் ஸ்மித்!...
US தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு, கடுமையான விதிகள் காரணமாக பல வீரர்கள் அமெரிக்காவில் விளையாட தயாராக இல்லை என அறிவித்துள்ளனர். உலக நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் விதிமுறைகளை கடுமையாக விமர்சித்தார். ரஃபேல் நடால், நியூயார்க்கிற்கு பயணம் செய்து ஆபத்தில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். ஆனால் புதிய விதிகளுடன் வீரர்கள் தங்கள் பயிற்சி அணியில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உடன் வர அனுமதிக்கப்படுகிறார்கள். இது US ஓபனுக்கு வரும் சில பெரிய வீரர்களை நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. எனினும் இதுவரை முன்னணி வீரர்களிடம் இருந்து முறையான அறிவிப்புகள் வரவில்லை.
எனினும் இந்த சவாலான தருணத்தில் மற்ற வீரர்களுக்கு முன் உதாரணமாக ‘தான் போட்டியில் பங்கேற்க விரும்புவதாக’ செரீனா தற்போது தெரிவித்துள்ளார்.