ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 36-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.


ஆப்கானிஸ்தான் தரப்பில் களமிறங்கிய வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக அஸ்கர் அப்கான் 42(35), நஜிப்புல்லா 42(54) ரன்கள் குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாயின் அப்ரிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.


இதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய பாஃகர் ஜாமன் 0(2), 36(51) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். எனினும் பாபர் ஆஜம் 45(51) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார்.



ஒரு கட்டத்தில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் இடையில் ஊசலாட, பாகிஸ்தான் அணியின் இமாட் வாஷிம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 49*(54) ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டத்தின் 49.4-வது பந்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்த பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி வாப்பை பெற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியது.