IND vs PAK: 5 விக்கெட் எடுக்கிறேன்... செல்பி போடுறேன்: ஷகீன் அப்ரிடி சவால்
இந்திய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் எடுத்த பிறகு ஒரு செல்பி நிச்சயம் எடுப்பேன் என ஷகீன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்தில் நடக்கிறது. இப்போட்டியில் நிச்சயம் 5 விக்கெட் எடுப்பேன் என கூறியிருக்கும் ஷகீன் அப்ரிடி, அதன்பிறகு ஒரு செல்பி எடுத்து சோஷியல் மீடியாவில் போடுவேன் என சவால் விட்டுள்ளார். அவர் அண்மைக்காலமாக மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஷகீன் அப்ரிடியின் மோசமான பந்துவீச்சு பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது. ஆசிய கோப்பை தொடரின் போது நல்ல பார்மில் இருந்த அவர், உலக கோப்பை தொடரில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. உலக கோப்பை பயிற்சி ஆட்டத்திலேயே அவரால் ஒரு விக்கெட்டுகள் கூட வீழ்த்த முடியவில்லை.
ஆனால் உலக கோப்பையில் நன்றாக பந்துவீசுவார் என பாகிஸ்தான் அணி நிர்வாகம் அவர் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தது. அந்த நம்பிக்கைக்கு உகந்த வகையில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஷகீன் அப்ரிடி பந்துவீசவில்லை. விக்கெட் எடுக்க தடுமாறியதுடன், நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தார். அவரது பந்துவீச்சை குறி வைத்து பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடினர். சரியான லைன் அன்ட் லென்தில் பந்துவீச முடியவில்லை. அவருக்கே உரித்தான ஸ்விங் பிளஸ் லென்த் லைன் இதுவரை வொர்க் அவுட் ஆகவில்லை. ரைட் ஆர்ம், அல்லது ஓவர் ஸ்விங் என எந்த சைடில் போட்டாலும் பந்து எதிர்பார்த்தளவுக்கு ஷகீன் அப்ரிடியின் பந்துவீச்சில் திரும்பவில்லை.
கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் மட்டும் சராசரியாக ஒரு போட்டிக்கு 69 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறார். இது பாகிஸ்தான் அணி நிர்வாகத்துக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இனி வரும் உலக கோப்பை போட்டிகள் அனைத்தும் மிக முக்கியமானவை என்பதால் ஷகீன் அப்ரிடி உடனடியாக பார்முக்கு திரும்ப வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் ஷகீனுக்கு டிப்ஸ்களையும் கொடுத்திருக்கின்றனர்.
இந்த நம்பிக்கையில் இருக்கும் அவர், இந்தியாவுக்கு எதிராக உலக கோப்பை போட்டியில் நிச்சயம் சிறப்பாக பந்துவீசுவேன் என தெரிவித்திருக்கிறார். பழைய பன்னீர் செல்வமாக பார்ப்பீர்கள் என்ற வசனம்போல், நிச்சயம் இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட் எடுப்பேன், அதன்பிறகு ஒரு செல்பி போடுவேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் சவாலாகவே சொல்லியிருக்கிறார். ஷகீன் அப்ரிடி எப்போதும் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசக்கூடியவர். 20 ஓவர் உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை என அனைத்து தொடர்களிலும் இந்திய அணியை ஆட்டம் காண வைத்திருக்கிறார். அண்மையில் நிறைவடைந்த ஆசிய கோப்பை போட்டியில் கூட இந்திய அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டும் அடங்கும்.
ஷகீன் அப்ரிடி பார்முக்கு திரும்புவதை பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் அதேவேளையில், உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தான் அணியிடம் தோற்றதில்லை என்ற வரலாற்றை இம்முறையும் நிரூபிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், இந்தியா - பாகிஸ்தான் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதனால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா காயம்... பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சந்தேகம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ