ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுமாக இருந்த ஷேன் வார்னே இதே தேதியில் கடந்தாண்டு காலமானார். அவரது இழப்பு கிரிக்கெட் உலகினரிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒருநாள் உலக கோப்பைகளை கைப்பற்ற காரணமாக இருந்த அவர், ஐபிஎல் தொடரில் தான் கேப்டனாக பொறுப்பேற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் முதல் ஆண்டே சாம்பியன் கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டனாகவும் மிளிர்ந்தார். அவர் ஒரு வீரராகவும், தனி மனிதராகவும் கிரிக்கெட்டுக்கு செய்த பணிகள் ஏராளம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தோனிக்கு பிறகு சிஎஸ்கே நம்பும் அந்த பிளேயர்..! ஐபிஎல் 2023-ல் முழுமையாக விளையாடுவாரா?


அதில் ஒன்று தான் இந்திய அணிக்கான ராக்ஸ்டார் ஆல்ரவுண்டரை கண்டெடுத்து கொடுத்தது. அவர் வேறு யாருமல்ல ஜடேஜா தான். இது குறித்த சுவாரஸ்ய தகவலை வார்னே மறைந்தபோது பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே வெளிப்படுத்தினார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஜடேஜாவின் திறமையை சரியாக அடையாளம் கண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தேர்வு செய்திருக்கிறார் வார்னே. ஹர்ஷா போக்லேவுடன் வார்னே உரையாடும்போது ஜடேஜாவுக்கு மிகப்பெரிய கிரிக்கெட் திறமை இருப்பதாக தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஜடேஜா ராக்ஸ்டாராக வருவார் என்றும் அப்போது வார்னே ஹர்ஷா போக்லேவிடம் தெரிவித்திருக்கிறார்.  



இது குறித்து ஹர்ஷா போக்லே பேசும்போது, " வார்னே ஜடேஜா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ராக்ஸ்டார் என்றும் அழைத்தார். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஜடேஜாவைப் பற்றி நாங்கள் இருவரும் பேசியிருக்கிறோம். ஜடேஜா நீங்கள் 2008 ஆம் ஆண்டு டி ஓய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற உரையாடலை நினைவில் கொள்ளுங்கள்" என ஜடேஜாவிடம் வார்னே மறைந்தபோது தெரிவித்திருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக வார்னே இருந்தபோது, அவரது தலைமையின் கீழ் ரவீந்திர ஜடேஜா விளையாடியுள்ளார்.


இதற்கு ஜடேஜா, "வார்னேவை முதன் முதலில் சந்திக்கும்போது அவர் அவ்வளவு பெரிய பந்துவீச்சாளர் என்றெல்லாம் எனக்கு தெரியாது. அவர் ஏன் என்னை ராக்ஸ்டார் என அழைத்தார்? என்றும் தெரியவில்லை. அவர் என்னை அவ்வாறு அழைத்தபிறகு என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டேன்" என்று கூறியிருந்தார். இப்படி இந்திய அணிக்கான ராக்ஸ்டாரை அடையாளம் கண்டு கொடுத்த ஜாம்பவான் வார்னே-ஐ தான் அவருடைய முதலாமாண்டு நினைவு நாளில் நினைவுகூர்ந்திருக்கிறோம். 


மேலும் படிக்க | IPL 2023: சேப்பாக்கத்தில் தோனி - மைதானத்துக்கு படையெடுக்கும் ரசிகர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ