புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் (Indian cricketer Shikhar Dhawan) மற்றும் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியை (Ayesha Mukherjee) விவாகரத்து செய்துள்ளார். இதன் மூலம் 8 ஆண்டுகளாக நீடித்து வந்த அவர்களின் திருமண பந்தம் முறிந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷிகர் தவானுடன் (Shikhar Dhawan) விவாகரத்து ஆகியிருப்பதாக அவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜி  (Ayesha Mukherjee) தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ALSO READ | இலங்கைக்கு எதிரான மீதமுள்ள டி-20 போட்டிகளில் ஷிகர் தவான் விளையாடுவது சந்தேகம்!



 


 



 


ஆயிஷா ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாவார். ஆயிஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளது. இவர் தனது முதல் கணவரை 2012ம் ஆண்டு விவாகரத்து செய்து ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் சோராவர் எனும் மகன் உள்ளார். 


ஆயிஷாவை முதல் முறையாக ஷிகர் தவான் பேஸ்புக்கில் பார்த்தார். அவருடைய புகைப்படங்களை பார்த்து வயப்பட்டு பின்னர் அறிமுகமாகி அது திருமணம் வரை சென்றது. முதலில் தவானின் பெற்றோர் இத்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் தவான் அவர்களை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்தார். ஆயிஷாவின் குடும்பத்தினர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள், பின்னர் ஆஸ்திரேலியாவில் குடியேறி இருக்கின்றனர்.


ALSO READ | IND vs SL: கிரிக்கெட் போட்டி, இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR