இலங்கைக்கு எதிரான மீதமுள்ள டி-20 போட்டிகளில் ஷிகர் தவான் விளையாடுவது சந்தேகம்!

கிரிக்கெட் செய்திகள்: இந்தத் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் ஷிகர் தவான் (Shikhar Dhawa) இடம்பெற மாட்டார் என்று ஒரு ஊடக அறிக்கை கூறுகிறது. அவருக்கு பதிலாக மீதமுள்ள இரண்டு போட்டிகளில் அணியை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 28, 2021, 03:37 PM IST
  • அவருக்கு பதிலாக மீதமுள்ள இரண்டு போட்டிகளில் அணியை யார் வழிநடத்துவார்கள்?
  • செவ்வாயன்று (ஜூலை 27) க்ருனால் பாண்டியாவுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதியானது.
  • தொடக்க வீரராக ஷிகர் தவானுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாட வாய்ப்பு.
இலங்கைக்கு எதிரான மீதமுள்ள டி-20 போட்டிகளில் ஷிகர் தவான் விளையாடுவது சந்தேகம்! title=

கிரிக்கெட் செய்திகள்: இலங்கை சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை முடித்துவிட்டு, தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. செவ்வாயன்று (ஜூலை 27) க்ருனால் பாண்டியாவுக்கு கோவிட் -19 தொற்று (COVID-19 Positive) இருப்பது உறுதியானத்தை அடுத்து, அவருடன் தொடர்பில் இருத்த பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் மற்றும் ஆஃப்- சுழற்பந்து வீச்சாளர் கிருஷ்ணப்ப கவுதம் அனைவரும் தனிமையில் இருப்பதால், இன்றைய போட்டியில் பங்கேற்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது. இந்த பட்டியலில் இப்போது மற்றொரு வீரரின் பெயரும் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வேறு யாருமல்ல, இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான்.

இந்தத் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் ஷிகர் தவான் (Shikhar Dhawan) இடம்பெற மாட்டார் என்று ஒரு ஊடக அறிக்கை கூறுகிறது. தற்போது களத்தில் ஆடும் 11 வீரர்கள் யார் என்பதில் ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனா விதிமுறைப்படி, ஷிகர் தவான் தனிமைப்படுத்தப்பட்டால், அவருக்கு பதிலாக மீதமுள்ள இரண்டு போட்டிகளில் அணியை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதன்படி பார்த்தால், தவான் ஒருவேளை விளையாடவில்லை என்றால், இந்த சுற்றுப்பயணத்திற்கு நியமிக்கப்பட்ட துணை கேப்டனாக இருக்கும் புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar) இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் ஷிகர் தவானுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாட வாய்ப்பு அளிக்கப்படலாம். ஒருவேளை, சஞ்சு சாம்சன் தொடக்க வீரர் என்ற பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். இதற்கிடையில், மணீஷ் பாண்டேவுக்கு கூட வாய்ப்பு கிடைக்கலாம். 

ALSO READ | IND vs SL: டி-20 போட்டி ஒத்திவைப்பு; க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

சாம்சன், கெய்க்வாட் மற்றும் பாண்டே தவிர, நிதீஷ் ராணாவும் தொடக்க வீரராக களம் இறங்கக்கூடிய ஒரு வீரராகவும் இருக்கிறார். இன்றைய இலங்கைக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இந்திய அணியில் யாரெல்லாம் விளையடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இரண்டாவது டி-20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொழும்பு மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) விளையாட திட்டமிடப்பட்டு இருந்த இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது டி-20 போட்டி (India Sri Lanka T20I Postponed) இன்று ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | TNPL கிரிக்கெட் 2021: நெல்லையை வென்றது திருப்பூர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News