காயம் காரணமாக வெளியேறிய ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த்..
ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த்தை அணியில் சேர்க்க ஐசிசியிடம் அனுமதி கேட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது!!
ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த்தை அணியில் சேர்க்க ஐசிசியிடம் அனுமதி கேட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது!!
2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆகும். மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது.
ஆஸ்திரேலியாவுடனான உலகக் கோப்பை லீக் போட்டியின் போது இடது கட்டைவிரலில் ஏற்ப்பட்ட காயம் காயம் காரணமாக ஷிகர் தவான், உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 109 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். அதற்கு அடுத்ததாக நடந்த நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
நியூசிலாந்து ஆட்டத்திற்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, “தவான் இன்னும் விளையாட்டை தொடர விரும்புகிறார், அவரின் இந்த எண்ணம் அவரை சீக்கிரம் காயத்தில் இருந்து குணமடைய செய்யும், அவர் காயத்தில் இருந்து மீண்டு அரை இறுதியில் பங்கேற்பார் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பிசிசிஐ வெளியிட்டிருந்த அறிக்கையில், "இந்தியா தொடக்க பேட்ஸ்மேன் தவான் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். தவான் தொடர்ந்து உலகக்கோப்பை தொடரில் இருப்பார் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பந்த் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்க ஐசிசியிடம் அனுமதி கேட்டுள்ளதாக பிசிசி தெரிவித்துள்ளது. அணியில் பந்த் சேர்க்கப்பட்டதற்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் காயமடைந்தார், காயம் முழுவதும் குணமடையாத காரணத்தால், உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.