ஷிகர் தவான் vs ரோகித் சர்மா; மீண்டும் மாறும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு
20 ஓவர் உலகக்கோப்பை விரைவில் நடக்க இருக்கும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் மாற்றம் ஏற்பட உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியை தழுவிய இந்திய அணி, 20 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியபோது கேப்டன் ரோகித் சர்மா இதனை ஆணித்தரமாக தெரிவித்தார். தோல்வியை ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர், இப்போது எழுந்திருந்திருக்கும் கேள்விகளுக்கு அப்போது உரிய பதில் கொடுப்போம் எனக் கூறினார். இதனை விட 20 ஓவர் உலகக்கோப்பையின்போது அதிக கேள்விகள் எழும் என குறிப்பிட்ட அவர், அனைத்துக்கும் நாங்கள் தயாராக இருப்போம் என்பதை மட்டும் உறுதிபடத் தெரிவித்தார்.
அவர் இவ்வாறு கூறியிருக்கும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் மீண்டும் மாற்றம் ஏற்பட உள்ளது. 20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதனால், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியை இந்த தொடரில் களமிறக்க இருக்கிறதாம் பிசிசிஐ. ஏற்கனவே, இந்திய அணிக்கு பல தொடர்களில் தலைமை தாங்கியிருக்கும் ஷிகர் தவானுக்கு இப்போது மீண்டும் அந்த பொறுப்பு தேடி வர இருக்கிறது.
மேலும் படிக்க | சச்சின் மகளை தவிர்த்து மற்றொரு நடிகையை டேட்டிங் செய்யும் கில்?
தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம் செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது. இன்சைட் ஸ்போர்ட்ஸிடம் பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் பேசும்போது, 'டி20 உலகக் கோப்பைக்கு முன் ஒருநாள் தொடரை நடத்துவது சரியல்ல. ஆனால் சில நேரங்களில் இது இப்படி நடக்கும். ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் டி20 உலகக் கோப்பைக்கு செல்லும் அனைத்து வீரர்களுக்கும் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்படுகிறது. அஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முன் அவர்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைக்கும். ஒருநாள் போட்டிக்கு ஷிகர் தவான் கேப்டனாக இருப்பார்" எனக் கூறியுள்ளார்.
இந்திய அணி மோதும் போட்டிகள்
தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய தொடர் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் 3 இருபது ஓவர் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்கா தொடர் தொடங்க இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே முறையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 11 வரை நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | கோலிக்கு முன்னாள் வீரர்கள் சப்போர்ட்... அப்செட்டில் ராகுல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ