சச்சின் மகளை தவிர்த்து மற்றொரு நடிகையை டேட்டிங் செய்யும் கில்?

நடிகை சாரா அலிகான் இளம் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் உடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 11, 2022, 09:43 AM IST
  • சுப்மான் கில் இந்திய டெஸ்ட் அணியின் இளம் வீரர்.
  • இவர் சச்சின் மகளை டேட்டிங் செய்து வந்தார்.
  • தற்போது சாரா அலிகானை டேட்டிங் செய்து வருகிறார்.
சச்சின் மகளை தவிர்த்து மற்றொரு நடிகையை டேட்டிங் செய்யும் கில்? title=

இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மான் கில் மீண்டும் ஒரு சாராவை பிடித்துவிட்டதாக இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர், அதற்கு காரணம் அவர் சமீபத்தில் நடிகை சாரா அலிகானுடன் டேட்டிங் செய்தது தான்.  இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் கில் ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரை காதலித்து வருவதாக கூறப்பட்டது, இதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாகவும் இருவரது இன்ஸ்டாகிராம் பக்க பதிவுகள் இருந்தது.  ஆனால் சில காரணங்களால் தற்போது இந்த ஜோடி பிரிந்துவிட்ட நிலையில் சுப்மான் கில், நடிகை சாரா அலிகானுடன் ஒன்றாக டின்னர் டேட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.   

சைஃப் அலிகான் மற்றும் அம்ரிதா சிங்கின் மூத்த மகளான சாரா அலிகானும் ஏற்கனவே கார்த்திக் ஆர்யனுடன் காதல் உறவில் இருந்து வந்தார், பின்னர் சில காரணங்களால் இவர்கள் பிரிந்துவிட்டனர்.  தாங்கள் பிரிந்துவிட்ட செய்தியினை காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகை சாரா அலிகான் தெரிவித்திருந்தார்.  தற்போது இணையத்தில் வைரலாக புகைப்படங்களை விட சுப்மான் கில்லின் நண்பர் குஷ்ப்ரீத் சிங் அவ்லாக் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தான் இந்த இரண்டு பிரபலங்களும் காதல் உறவில் இருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.  கடந்த வியாழக்கிழமையன்று சுப்மான் கில் அவரது பிறந்தநாளை கொண்டாடினார், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக குஷ்ப்ரீத் பதிவிட்ட இன்ஸ்டாகிராமில் 'பகுத் சாரா பியார்' என்கிற தலைப்பில் சில வரிகளை பதிவிட்டுள்ளார்.

sara

மேலும் படிக்க | கோலிக்கு முன்னாள் வீரர்கள் சப்போர்ட்... அப்செட்டில் ராகுல்

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சுப்மான் கில் மற்றும் சாரா அலிகான் இருவரும் காதலித்து வருவதாக கருதினர், இந்த பதிவு வைரலானதும் அவரது நண்பர் குஷ்ப்ரீத் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தனிப்பட்ட கணக்காக மாற்றிவிட்டார்.  ஆரம்பத்தில் சுப்மான் கில் மற்றும் சாரா அலிகான் இருவரும் ஹோட்டலில் இருந்த புகைப்படம் வைரலாக நிலையில் தற்போது இந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | உலக கோப்பைக்கான இந்திய அணி இதுதான்! வெளியான தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News