இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளாக திருமணம் உறவில் இருந்தனர். அவருக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற மகனும் உள்ளார். இவர்களின் திருமண வாழ்வு சிறப்பாகவே இருந்துவந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீப காலங்களாக இருவரின் உறவு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. சோயிப் மாலிக், பாகிஸ்தான் மாடல் அழகி ஆயிஷா ஓமர் என்பவருடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாக கூறப்பட்டது. மேலும், அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட போட்டசூட் புகைப்படங்களும் வைராலகின. 


இந்த விவகாரம் அறிந்த பின்னர்தான் சானியா மிர்சா, மாலிக்கை விட்டு பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இருப்பினும் இருவர் தரப்பில் இருந்தும், இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | சானியா மிர்சா விவாகரத்தை அறிவிக்காதது ஏன் தெரியுமா...?


இந்நிலையில், சோயிப் மாலிக் தனது மகன் இஷான் மிர்சா மாலிக் உடன் சொகுசு காரில் பயணம் செல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"தந்தை - மகன் இருவருக்கும் இடையே நல்ல நேரம் அமைந்தது. லங்கன் பிரீமியர் தொடருக்கு செல்வதற்கு முன் அவனுடன் நீண்ட ஒரு கார் டிரைவ். நாங்கள் சீட் பெல்ட் அணிந்து சென்றோம். நீங்களும் காரில் சென்றால் சீட் பெல்ட்களை மறக்காமல் போட்டுக்கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார். 



சானியா - மாலிக் இருவருக்கும் விவாகரத்து என கூறப்பட்ட நிலையில், அவர் தனது விலையுர்ந்த லம்போர்கினி காரில் அவரது மகனை அழைத்துசெல்லும் வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மேலும், சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், லங்கன் பிரீமியன் லீக் தொடரில் ஜஃப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டியில், ஜஃப்னா கிங்ஸ் அணியுடன் காலி கிளாடியேட்டர்ஸ் அணி மோத உள்ளது. 


மேலும் படிக்க | அழகி உடன் கணவரின் நெருக்கமான படங்கள் - சானியா மிர்சா விவாகரத்துக்கு இதுதான் காரணமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ