Shocking News! Tokyo ஒலிம்பிக்ஸில் தீவிரவாதி தங்கப்பதக்கம் வென்றாரா? சர்ச்சை…
டோக்கியோ ஒலிம்பிக்கில் தீவிரவாதி ஒருவருக்கு எப்படி பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டது? ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வென்ற பயங்கரவாதிக்கு எப்படி ஒலிம்பிக் கமிட்டி தங்கப் பதக்கம் கொடுத்து என்ற விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தீவிரவாதி ஒருவர் தங்கப் பதக்கம் வென்றார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி உலக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தீவிரவாதி ஒருவருக்கு எப்படி பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டது? விளையாட்டுப் போட்டியில் வென்ற அவருக்கு எப்படி ஒலிம்பிக் கமிட்டி தங்கப் பதக்கம் கொடுத்து என்ற விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை என்ற பயங்கரவாத அமைப்பின் (Iran’s Islamic Revolutionary Guard Corps) உறுப்பினரான ஜாவாத் ஃபோரூஜி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் தங்கம் வென்றுள்ளார். தங்கப் பதக்கம் கொடுத்த ஒலிம்பிக் கமிட்டியை தென்கொரிய துப்பாக்கி சுடும் வீரர் ஜின் ஜாங்-ஓ (South Korean shooter Jin Jong-oh) கடுமையாக சாடியுள்ளார்.
Also Read | டோக்யோ ஒலிம்பிக்: அரையிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை பிவி சிந்து!
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் சனிக்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் (air pistol event) ஜவாத் ஃபோரோஜி (Javad Foroughi) தங்கப் பதக்கம் வென்றார்.
ஜின் ஜாங்-ஓ, இன்சியான் சர்வதேச விமான நிலையத்திற்கு (Incheon International Airport) வந்தபோது அவரிடம் ஒலிம்பிக் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "ஒருட தீவிரவாதி எப்படி ஒலிம்பிக்கில் முதல் இடத்தை வெல்ல முடியும்? அது மிகவும் அபத்தமான மற்றும் ஆபத்தமான விஷயம்" என்று சீற்றத்துடன் தெரிவித்தார்.
2012 லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஜின் ஜாங்-ஓ. அதுமட்டுமல்ல, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். ஆஅனால், தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் தகுதி சுற்றில் தோல்வியடைந்தார்.
ஃபோரோகியின் வெற்றியைத் தொடர்ந்து, ஈரானிய மனித உரிமை தடகள அமைப்பு, யுனைடெட் ஃபார் நாவிட், (Iranian human rights athletic organization, United for Navid ) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதற்கு பிறகு தென்கொரிய விளையாட்டு வீரர் தெரிவித்த இந்தக் கருத்து மிகவும் முக்கியத்தும் பெறுகிறது.
Also Read | தோனியின் புதிய ஹெர் ஸ்டைல் இணையத்தில் வைரல்
"ஈரான் விளையாட்டு வீரர் ஜாவத் ஃபோரோகிக்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வழங்குவது ஈரானிய விளையாட்டுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திற்கும், குறிப்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நற்பெயருக்கும் மிகப் பெரிய இழிவு. இரானைச் சேர்ந்த 41 வயதான ஜவாத் ஃபோரோஜி (Javad Foroughi) பயங்கரவாத அமைப்பு ஒன்றில் நீண்டகால உறுப்பினராக இருக்கிறார். அவர் இப்போதும் அந்த தீவிரவாத அமைப்பின் உறுப்பினர் தான்" என்று யுனைடெட் ஃபார் நாவிட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் விசாரணை முடிவடையும் வரை, தற்போது ஜாவேத்துக்கு கொடுக்கப்பட்ட பதக்க விருது நிறுத்திவைக்கப்பட வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
2013 மற்றும் 2015 க்கு இடையில் சிரியாவில் செவிலியராக பணியாற்றியதாக கூறிய 41 வயதான இரான் நாட்டின் ஜவாத் ஃபோரோஜி (Javad Foroughi), பதக்கம் வாங்குபோது ராணுவ மரியாதை செலுத்தினார்.
Also Read | Team India: மேலும் 2 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR